ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே பனிப்போரா? மீண்டும் இணையுமா இந்த வெற்றிக்கூட்டணி?

தமிழ்த்திரை உலகில் 90களின் இறுதியில் இருந்தே டைரக்டர் ஷங்கர், A.R.ரகுமான் வெற்றிக்கூட்டணியாக இருந்து வந்தனர். ஷங்கரின் இயக்கத்தில் முதல் படம் 1999ல் வெளியான ஜென்டில்மேன். அப்போதே ஏ.ஆர்.ரகுமான் தான் இசை அமைப்பாளர். அதன்பிறகு வந்தது காதலன். இந்தப் படத்திலும் அவர் தான். எல்லாப் பாடல்களுமே ஹிட்.

இந்நிலையில் படத்தில் 3வது முறையாக ஜோடி சேர்ந்தது இந்த வெற்றிக் கூட்டணி. பாட்ஷாவின் வசூல் சாதனையை முறியடித்தது இந்தியன். மேலும் இந்தப் படம் 1977ல் வெளியான நாம் பிறந்த மண் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

அடுத்து இந்தக் கூட்டணியில் வெளியான படம் பாய்ஸ். இந்தப் படத்திற்காக ஒரு பாடல் காட்சியை எடுப்பதற்கு 62 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

Indian 2

ஷங்கர் ரகுமான் இல்லாத குறையை ஹாரிஸ் ஜெயராஜை வைத்து இசை அமைத்த படம் அந்நியன். இந்தப்படத்தின் பிஜிஎம்மும் கொண்டாடப்பட்டது. அடுத்து 2007ல் ஷங்கர், ரகுமான் கூட்டணி செய்த அதிசயம் தான் சிவாஜி தி பாஸ். சந்திரமுகியோட சாதனையை சிவாஜி முறியடித்தது. இந்தப் படத்தோடப் பாடல்களும், பிஜிஎம்மும் பயங்கரமா கொண்டாடப்பட்டது. பல விருதுகளைப் பெற்றன.

3 வருட இடைவெளிக்குப்பின் எந்திரனில் ஷங்கர், ரகுமான் கூட்டணி ஜோடி சேர்ந்தது. அதன்பிறகு விக்ரமின் 50வது திரைப்படம் ஐ வந்தது. இதில் அனிருத் மெர்சலாயிட்டேன்னு ஒரு பாடல் பாடினார். இந்தப் பாடலை அனிருத் தான் பாடணும்னு ஷங்கர் அடம்பிடித்துக் கேட்டு வாங்கினாராம்.

இதன்பிறகு எந்திரன் படத்தோட 2ம் பாகமாக 2.0 வெளியானது. இதுவும் பல சாதனைகளை முறியடித்தது. ஷங்கர், ரகுமான் கூட்டணியின் கடைசி படம் இதுதான். தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் இந்த ஜோடி மீண்டும் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் அனிருத் என அறிவிக்கப்பட்டது. இது ரகுமான் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டது.

ரகுமானுக்கும், ஷங்கருக்கும் இடையில் பனிப்போர் என்றும் சொல்லப்பட்டது. அதனால் தான் ஷங்கர் ரகுமானைப் பயன்படுத்தவில்லை என்றனர்.

ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்திலும் ரகுமான் இல்லை. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் தமன். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்துக்கான புரோமோவிலும் அனிருத்தின் இசை பெரிதாக எடுபடவில்லை.

இந்த இடத்தில் ரகுமான் இருந்து இருந்தால் இந்தியன் முதல் பாகம் போல் அனைத்துப் பாடல்களும் செம மாஸாக இருந்திருக்கும் என்றார்கள். அதனால் மீண்டும் ஷங்கரும், ரகுமானும் இணைவார்களா என்றே திரையுலகம் எதிர்பார்த்து வருகிறது.

 

Related Articles

Next Story