Categories: Cinema News latest news

சம்பளம் என்னவோ கம்மி தான். ஆனா கண்ணை கட்ட வைக்கும் ராம்சரணின் சொத்து மதிப்பு!

RamCharan: தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பவர் ராம்சரண். இவர் தமிழ் நடிகர்களுடன் ஒப்பிடும்போது வாங்கும் சம்பளம் ரொம்பவே கம்மிதான் என்றாலும் சொத்துமதிப்பை கேட்டால் ஷாக் ஆகும் நிலையில் தான் இருக்கிறது.

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் ராம்சரண். இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து வெளிவந்த மகதீரா திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் வெகுவாக பிடித்தது. இதனால் முன்னணி நடிகராக ராம்சரண் மாறினார். தன்னுடைய படங்களை யோசித்து தேர்வு செய்வார். அவர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வாங்கியது.

இதையும் படிங்க: ஆண்ட்டின்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்!.. வி சேஃப் டிரெஸ்ஸில் அழகை காட்டும் கனிகா!…

இத்தனை புகழை வைத்திருந்தாலும் ராம்சரணுக்கு ஒரு படத்துக்கு 100 கோடிக்குள் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். விளம்பரங்களுக்கு அவருக்கு 2 கோடி ரூபாய் வரை கொடுக்கப்படுகிறதாம். ப்ரூட்டி, பெப்சி, ஜீயோ, ஹாட்ஸ்டார், மான்யவார் உள்ளிட்ட பிரபல விளம்பரங்களில் இதுவரை ராம்சரண் நடித்து இருக்கிறார். 

இதுமட்டுமல்லாமல் தன்னுடைய தந்தை நடிப்பில் வெளியான கைதி நம்பர் 150, சை ரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களை தன்னுடைய கொனிட்டில்லா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார். ட்ரூஜெட் என்ற ஏர்லைன் நிறுவனத்தினையும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், தனியாக ஒரு பிரைவேட் ஜெட், 3.50 கோடி மதிப்புள்ள ஃபெர்ராரி, 3.2 கோடி மதிப்புள்ள அஸ்டான் மார்ட்டீன், 4 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ், 9.57 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரையும் தன்னுடைய கணக்கில் வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பல்ப் வாங்குறது விஜயாவுக்கு ரொம்ப பழக்கமான விஷயம்… ஆனா அதுக்குனு இவ்வளோவா?

தனிப்பட்டு 150 கோடி வரை முதலீடுகளை செய்து இருக்கிறாராம். மொத்தமாக ராம்சரணின் சொத்துமதிப்பு மட்டும் 1370 கோடி ரூபாயை தாண்டும் எனக் கூறப்படுகிறது. தற்போது கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வெற்றியடையும் பட்சத்தில் மேலும் வருமானம் எகிறவும் வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily