Connect with us
vishal

Cinema News

எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பப்ளிசிட்டி முக்கியம்!.. ரத்னம் படத்தின் கதை இதுதான்.. ஹரி ஓபன் டாக்!..

சாமி, சிங்கம் படங்களைப் போல ஆக்சன் காட்சிகள் அதிரடி கிளப்பும் படமாக ரத்னம் படம் இருக்கும் என அந்தப் படத்தின் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி ரிலீசாக உள்ளது.

அந்த படத்தின் புரமோஷனுக்காக ஒரு வாகனத்தை தமிழ்நாடு முழுக்க அனுப்ப குழு திட்டமிட்டுள்ளது. நேற்று அந்த வாகனத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் ஹரி ரத்னம் படத்தின் கதையையும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தளபதி 69 படத்துக்காக விஜய் வச்ச டெஸ்ட்!.. கடைசியா பாஸ் ஆனது எச். வினோத் மட்டும் தானாம்?..

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. அந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்க உள்ளார்.

நாட்டில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள், 40% பேர் தான் நல்லவர்கள் அந்த 40% பேரை காப்பாற்ற சமூகத்தில் கெட்டது செய்யும் நபர்களை பார்த்த இடத்திலேயே தூக்கி போட்டு மிதிக்கும் குணம் கொண்ட ஒருத்தன் தான் ரத்னம். சினிமாவில் தான் இதுபோன்ற ஆட்களை பார்க்க முடியும், நிஜத்தில் பார்க்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. அதெல்லாம் நம்முடைய வலிகளை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக இருக்க முடியும் அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ரத்னம்.

இதையும் படிங்க: யார வச்சு படம் எடுத்தாலும் பாப்போம்னு நினைச்சீங்களா? ரசிகர்களின் எரிச்சலை பெற்ற திரைப்படம்

சாமி மற்றும் சிங்கம் படங்களில் எந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது அதைவிட வெறித்தனமாக ரத்னம் படத்தை எடுத்திருக்கிறேன். என்னதான் பெரிய இயக்குனர் பெரிய நடிகர்கள் நடித்தாலும் அரசியல்வாதிகளை தேர்தலுக்கு முன்னாடி பப்ளிசிட்டிக்காக மக்களை சந்திப்பதற்கு கிடையாதா? அதே போலத்தான் எங்களுக்கும் பப்ளிசிட்டி தேவைப்படுகிறது.

நாங்க ஒரு படத்தை எடுத்து இருக்கிறோம் என்றால், அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தால் மட்டுமே அந்த படம் ரிலீஸ் ஆவது குறித்தும் அதை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டும் என்றும் சும்மா என் படத்துக்கு பப்ளிசிட்டி எல்லாம் வேண்டாம். பண்ண மாட்டேன்னு சொன்னால், ஒருத்தனும் படத்தை வந்து பார்க்க மாட்டான் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த மேட்டருக்கு காச அள்ளி அள்ளி கொடுப்பாரு! கவுண்டமணியை பற்றி இவ்வளவு இருக்கா?

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top