Categories: Cinema News latest news throwback stories

வடிவேலு கண்ணாடி போட்ட குபீர் காரணம்!.. வசமாக விஜயகாந்திடம் சிக்கிய சூப்பர் சம்பவம்!

Vadivelu: தமிழ் சினிமாவில் இப்போதைய ஹாட் டாப்பிக்கே வடிவேலு மற்றும் விஜயகாந்த் தான். வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்தை மேடையில் வாயிக்கு வந்த மாதிரி பேசியவர் வடிவேலு. இருந்தும் அவரை எப்போதும் திட்டாமல் இருந்தவர் தான் விஜயகாந்த்.

இதை அவரின் மனைவியே பல பேட்டிகளில் சொல்லியும் இருக்கிறார். விஜயகாந்தை குடிக்காரர் என்ற ரீதியில் அவர் நடித்து காட்டி அசிங்கப்படுத்திய போதும் வடிவேலுவுக்கு தன்னுடைய சகாக்களிடம் வாய்ப்பு கொடுங்க என்றே கூறி வந்தாராம் வடிவேலு. ஒரு இடத்தில் கூட வெறுப்பை காட்டியது இல்லையாம்.

இதையும் படிங்க: காக்கா கழுகு கதை சொல்லும் நடிகர்கள் மத்தியில் கெத்து காட்டிய தனுஷ்! பேசியதை கேட்டா ஆச்சரியப்படுவீங்க

இப்படி இருக்கும் போது, மதுரைக்கு இருவரும் அடிக்கடி ஒரே விமான நிலையத்திலோ இல்ல பொது இடத்திலோ நேருக்கு நேர் சந்திக்க கூடும் என யோசித்து இருக்கிறார் வடிவேலு. அதற்காக தான் கண்ணில் கண்ணாடி அணிய தொடங்கினாராம். அப்படி இருக்கும் போது நாம் அவரை பார்க்க வேண்டாம்.

எளிதாக நகர்ந்து சென்று விடலாம் என எண்ணி இருக்கிறார். அதனால் வெளியில் செல்லும் போது கருப்பு கண்ணாடியை போடுவதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். அப்படி வடிவேலு பயந்த சமபவமும் நடந்து இருக்கிறது. ஒருமுறை விமான நிலையத்தில் இவர் வரும் போது விஜயகாந்த் எதிரில் வந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: எழிலுக்கு ப்ரேக்… இன்னைக்கு செழியன் பிரச்னை… மீண்டும் ரிவர்ஸ் கியர் எடுத்த ராதிகா… முழிக்கும் கோபி!..

அடுத்த நாளே சாலிகிராமத்தின் குறுகிய ரோட்டில் இருவரின் காரும் முன்னுக்கு நிற்க வடிவேலு யோசிக்கும் நேரம் கூட யோசிக்காமல் விஜயகாந்த் தன்னுடைய காரை பின்னுக்கு எடுக்க சொல்லி அவருக்கு வழிவிட்ட சம்பவமும் கூட நடந்ததாம். இப்படி ஆரம்பித்து தற்போது பலரிடம் தப்பிக்க கண்ணாடி போட்டு வடிவேலு சுற்றி வருவதாக பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Shamily