Cinema News
அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகியிருந்தா கமல்தான் நம்பர் ஒன்!.. மூத்த நடிகர் பேட்டி!…
Published on
By
Marudhnayagan: 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கலை பயணம் இன்னமும் நிற்கவில்லை. வாலிபரான பின் உதவி நடன இயக்குனராக வேலை செய்தார். ஒருகட்டத்தில் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவரின் படங்களில் நடிக்க துவங்கினார்.
கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் கலைப்படங்கள் மீது கமலுக்கு அதிக தாகம் இருந்தது. அதனால்தான் தனது 100வது படமாக ராஜபார்வை படத்தை தேர்ந்தெடுத்தார். ஹாலிவுட் ஸ்டைல் படங்கள் தமிழிலும் வரவேண்டும், உலக தரத்தில் தமிழ் படங்கள் உருவாக வேண்டும் என எப்போதும் ஆசைப்படும் கமல் அப்போதே ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் விக்ரம் படம் எடுத்தார்.
இதையும் படிங்க: கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா? ஒரு வெறியோடதான் இருக்காரு
படம் முழுக்க பேசாமல் நடித்து பேசும்படம் என்கிற படத்தை எடுத்தார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், ஹே ராம், குருதிப்புனல், விஸ்வரூபம், தசாவதாரம் என தமிழ் சினிமாவில் முக்கிய படங்களை உருவாக்கினார். இதில், பல படங்கள் பரிசோதனை முயற்சிதான்.
கமல் மிகவும் ஆசைப்பட்டு எழுதி இயக்கி நடித்த திரைப்படம் மருதநாயகம். மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவானது. ஒரு தமிழன் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போரிட்ட கதை அது. இப்படத்தின் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபத் கலந்து கொண்டார்.
ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கமலின் படங்களில் தொடர்ந்து நடித்த மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி சில மாதங்களுக்கு முன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மருதநாயகம் படம் மட்டும் வெளியாகியிருந்தால் தேசிய அளவில் கமல் பெரிய இயக்குனராக மாறியிருப்பார். அவருக்கு பின்னரே மணிரத்னம், ஷங்கர், ராஜமவுலி போன்ற இயக்குனர்கள் இருந்திருப்பார்கள்.
அப்படி ஒரு கதையை எழுதி அதை சிறப்பாக இயக்கினார் கமல். அந்த படத்தை ஒரு ஹாலிவுட் நிறுவனம் தயாரித்தது. முதல் 30 நிமிட காட்சியை கமல் எடுத்துவிட்டார். அப்போதுதான் இந்திய அரசு அணுகுண்டு சோதனை செய்து பார்த்து வெற்றி பெற்றது. எனவே, இனிமேல் இந்தியா பெரிய நாடாகிவிடும் என நினைத்த அந்த தயாரிப்பு நிறுவனம் செலவு செய்ய முடியாது’ என சொல்லிவிட்டனர்’ என சொல்லி இருந்தார்.
இதையும் படிங்க: கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...