Connect with us
karthik

Cinema News

ஷூட்டிங் லேட்டா போறதுக்கு கார்த்திக் சொன்ன காரணம் இதுதான்!.. அட இது புதுசா இருக்கே!..

Actor karthik: தமிழ் சினிமாவில் 1960களில் பல திரைப்படங்களில் நடித்தவர் முத்துராமன். திறமையான நடிகர் என எம்.ஜி.ஆராலேயே பாராட்டப்பட்டவர். ஹீரோவாகாவும், பல படங்களில் மற்ற ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் மகன்தான் கார்த்திக். பாரதிராஜாவால் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர்.

இவரும் பல படங்களில் நடித்து ரஜினி – கமல் – விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர். அப்பாவை போலவே சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர். உடல் மொழி, வசன உச்சரிப்பு எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டிய தனித்துவமான நடிகர் இவர். கமலுக்கு பின் காதல் இளவரசனாக பார்க்கப்பட்டவர்.

இதையும் படிங்க: ஈஸியா விட்டுக்கொடுத்துட்டாரு! நானா இருந்தா விட்டுக் கொடுக்கவே மாட்டேன் – கார்த்திக் பற்றி ரஜினி பெருமிதம்

கார்த்திக் சோக காட்சிகளில் நடித்தால் ரசிகர்களுக்கே கண்ணீர் வரும். அவ்வளவு இயல்பாக நடிப்பார். ஆனால், படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்தில் போக மாட்டார். காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 1 மணிக்குதான் படப்பிடிப்பு தளத்திற்கே போவார். சில நாட்கள் அதுவும் போகமாட்டார். அவரை படப்பிடிப்புக்கு வரவைப்பது சாதாரண விஷயம் இல்லை.

இரவு தாமதமாக படுத்து மதியம் வரை தூங்குவதுதான் கார்த்தியின் பழக்கம். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஒருபக்கம் விஜய் – அஜித் போன்ற நடிகர்கள் மார்க்கெட்டை பிடித்துவிட தனது இடத்தை கார்த்திக் இழந்தார். இப்போது அவரின் மகன் கவுதம் கார்த்திக் சினிமாவில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கார்த்திக்கின் நட்புக்காக நெப்போலியன் செஞ்ச அந்த காரியம்!. அட இது வேற வேற லெவல்!..

கார்த்திக் ஹீரோவாக பல படங்களில் நடித்துகொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஒருவர் சமீபத்தில் ஒன்றில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தாமதமாக படப்பிடிப்புக்கு போவது பற்றி கார்த்திக் அவரின் என்ன பகிர்ந்து கொண்டார் என்பதை சொன்னார்.

நானும் பிரபுவும் இஷ்டப்பட்டு சினிமாவுக்கு வரவில்லை. ஒரு விபத்தில் நடிகராகியவர்கள் நாங்கள். என் அப்பா நடிகர். அதேபோல், சிவாஜி சாரின் மகன் பிரபு என்பதால் நடிகராகிவிட்டோம். காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வருவது என்பது எங்கள் உடல்வாகுக்கு செட் ஆகாது. நாங்கள் வளர்ந்த விதமே அப்படித்தான். அதேநேரம் நடிப்பு என வரும்போது அதில் சரியாக இருப்போம்’ என சொன்னாராம் கார்த்திக்.

இதையும் படிங்க: 12 தோல்வி படங்கள்!.. ஒரு ஹிட் படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய கார்த்திக்…

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top