ஈஸியா விட்டுக்கொடுத்துட்டாரு! நானா இருந்தா விட்டுக் கொடுக்கவே மாட்டேன் - கார்த்திக் பற்றி ரஜினி பெருமிதம்
Rajini about Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். 90களில் ஒரு ப்ளே பாயாகவும் இருந்தார். இவரை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். முன்னணி நடிகைகளுக்கே ஒரு கனவு நாயகனாகவும் இருந்தார் கார்த்திக்.
காதல் கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியவர். ஆனால் சமீபகாலமாக கார்த்திக்கை வெளியே பார்க்க முடிவதில்லை. எப்படி இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கார்த்திக்கை பற்றி யாருக்குமே தெரியவில்லை.
இதையும் படிங்க: லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..
இந்த நிலையில் ஒரு விழா மேடையில் கார்த்திக்கை பற்றி ரஜினி மிகவும் பெருமிதமாக பேசியிருக்கிறார். ஒரு படத்தில் கார்த்திக்கு மாமனராக ரஜினி நடித்திருப்பார். கார்த்திக்கும் நடிகர் ரமேஷ் கண்ணாவும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
கார்த்திக்கு பெஸ்ட் காம்போவாக ரமேஷ் கண்ணா இருந்திருப்பார். அப்படி அவர்கள் நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது எதிர்பாராதவிதமாக ஒரு பெரும் தொகை இவர்களுக்கு கிடைக்கும். அப்படி கிடைத்த பணம் யாருக்கு சொந்தம் என்ற போட்டி வரும்.
இதையும் படிங்க: சிவகுமாருக்கு அவர் தந்தை சொன்ன ஜோசியம் என்ன தெரியுமா?.. அச்சு அசலாக அப்படியே நடந்ததாம்..!
அதில் கார்த்திக் தரையில் ஒரு கட்டம் போட்டு இந்த கட்டத்திற்குள் எவ்வளவு பணம் விழுகிறதோ அது உனக்கு. மீதம் எனக்கு என்று சொல்லி ஒரு ரூபாய் மட்டும் விழுகிற மாதிரி அந்த கட்டத்திற்குள் போடுவார். அதை எடுத்து ரமேஷ் கண்ணாவுக்கு கொடுப்பார்.
இதே போல் ரமேஷ் கண்ணாவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே‘ ஆண்டவா! மேலே காசுகளை போடுகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு மீதியிருக்கும் காசுகளை மட்டும் கீழே போடு’ என தூக்கி போடுவார். போட்ட காசுகள் எல்லாம் கீழே விழும். அதற்கு ரமேஷ் கண்ணா ‘god is very great’ என சொல்லி எல்லாவற்றையும் எடுப்பார்.
இதையும் படிங்க: செழியன் பிரச்னையில் பலியாடு ஆன பாக்கியா.. எழில் பிரச்னையும் இவர் தலையில் தான் விடியுமோ..!
உண்மையில் ரமேஷ் கண்ணா பேசிய அந்த வசனம் மட்டும் ரமேஷ் கண்ணாவின் யோசனையாம். அதனால் அதை கார்த்திக் தான் பேச வேண்டியதாம். ஆனால் கார்த்தில் நோ நோ இதுல என்ன இருக்கு? அவரே அதை பேசட்டும் என விட்டுக் கொடுத்துவிட்டாராம்.
இதை குறிப்பிட்டு பேசிய ரஜினி ஒரு ஹீரோவாக இருந்து நான் இப்படியெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனால் கார்த்திக் அப்படி செய்தது அவரது பெருந்தன்மை என்று கூறினாராம்.