சிவகுமாருக்கு அவர் தந்தை சொன்ன ஜோசியம் என்ன தெரியுமா?.. அச்சு அசலாக அப்படியே நடந்ததாம்..!

Sivakumar: தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் கவர்ந்தவர் தான் சிவகுமார். ஹீரோவாக, குணசித்திர நடிகராக என அவர் காட்டிய பரிணாமம் அதிகம். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னரே அவர் தந்தை இவரை பற்றி ஒரு ஜோசியம் சொன்னாராம். அதுவும் நடந்தது என்பது தான் அதிர்ச்சியான செய்தி.

தன்னுடைய தாய் வயிற்றில் சிவகுமார் ஜனித்த போது அவர் தந்தை ஒரு கடிதத்தினை தன்னுடைய மனைவி கையில் கொடுத்து இருக்கிறார். அதை பிரித்த சிவகுமாரின் தாயாருக்கு அதிர்ச்சி. அதில், பிறக்கபோவது கண்டிப்பாக ஆண் குழந்தைதான். ஆனால் இந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் நான் இறந்துவிடுவேன்.

இதையும் படிங்க: ஏமாத்திட்டு போக சான்ஸே இல்ல!.. பிக்பாஸுக்கு பிரபலங்களை தேர்வு செய்ய இவ்வளவு டாஸ்க் இருக்கா?!..

அப்படி நடக்கவில்லை என்றால் இவன் என் மகன் அல்ல என எழுதி இருந்தாராம். அவர் சொன்னது போலவே சிவகுமாரை பெற்று எடுத்து இருக்கிறார் அவர் தாய். ஆனால் அடுத்து கூறிய ஜோசியம் பயமுறுத்தியதாம். அதுப்போலவே சிவகுமாரை அவர் அப்பா கொஞ்சும் போதே ஒரு வருசத்துக்குள்ள என்னைத் தூக்கி சாப்பிட போறியா கண்ணா என்று தான் கொஞ்சுவாராம்.

அவர் கணித்தப்படியே சரியாக 10 மாதம் நடக்கும் போதே 33 வயதான சிவகுமாரின் தந்தை இறந்து விடுகிறார். தந்தைக்கான இறுதிக்காரியம் முடித்து அனைவரும் வீட்டுக்கு திரும்ப சிவகுமார் முதல்முறையாக எழுந்து நின்றாராம்.

இதையும் படிங்க: முத்துவின் வாழ்க்கையில் தொடங்கிய பிரச்னை..! ரோகினிக்கு செக் வைத்த விஜயா..! சிக்கிட்டோமோ..!

அதுப்போல சிவகுமாரின் தந்தை தன்னுடைய வாழ்வில் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு ஆயுள் குறைவு. படம் எடுத்து அதுக்கு வருஷா வருஷம் திதி கொடுக்க தேவையில்லை என்றே சொல்லி வந்தாராம். தமிழ் கடவுள் முருகன் மீது அதிக பற்றுக்கொண்டவர்.

அதனால் தன் மனைவிக்கு கடைசியாக கொடுத்த பொருளும், முருகனின் புகைப்படம் தானாம். அதனால் தான் சிவகுமார் தன்னுடைய மகன்களுக்கு கார்த்தி, சரவணன் (சூர்யா) என முருகன் பெயரினை தந்தையின் நினைவாக வைத்தார் எனவும் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story