Categories: Cinema News latest news

லியோ படத்தை கைவிட்ட ரெட் ஜெயிண்ட்!.. கலக்கத்தில் தயாரிப்பாளர்!.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியான லியோ க்ளிம்ஸ் வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஜெயிலர் படத்திற்கு அடுத்து, மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கும் படம் லியோ. இந்த படத்தில் ஆடியோ லாஞ்ச் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க- என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

மலேசியாவில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படம் ஜெயிலரின் வசூல் சாதனையை முறியடித்துவிடும் என்று ஒருசிலர் கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், லியோ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட இதுவரை யாருமே முன்வரவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், கர்நாடகாவில், அவரே இந்த படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டார். இந்தியில் இந்த படத்தை ஒரு நிறுவனம் வாங்கிவிட்டது. ஆனால் இன்று வரை தமிழில் வெளியிட யாரும் வாங்க வில்லை.

ஜெயிலர், மாமன்னன், மாவீரன் என சமீபத்தில் வெளியாகும் எல்லா படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் கூட ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் தான் வெளியிடப்பட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டிற்கும் மேலேக, வெளியான பெரும்பாலான படங்களை வாங்கி வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், இதுவரை லியோ படத்தை வெளியிட முன்வர வில்லை. எனக்கு தெரிந்தவரை, அப்படி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே, தற்போது, லியோ படத்தை யார் வெளியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க- லியோ படத்தில் இது கன்பார்ம்… தெறிக்க விட இருக்கும் விக்ரம்.. அதிர வைக்கும் பின்னணி!

Published by
prabhanjani