×

மாஸ்டர் தீபாவளிக்குதான் ரிலீஸ்? - அதிர்ச்சியாகும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாஸ்டர் பட பணிகள் முடங்கியுள்ளன. 
 

ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், கொரொனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

அதன்பின், இத்திரைப்படம் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியன்று வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், கொரொனா விவகாரம் ஆகஸ்டு மாதம் வரை செல்லும் என கணக்குப்போட பட தயாரிப்பு நிறுவனம், மாஸ்டர் திரைப்படத்தை வருகிற தீபாவளியன்று வெளியிடலாம் என திட்டமிட்டு வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில், விஜயின் துப்பாக்கி, கத்தி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்கள் தீபாவளியன்றுதான் வெளியானது. 

அதேநேரம் , மாஸ்டர் படத்தை காண இன்னும் 7 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமா என விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, அவர்களை குஷிப்படுத்த ஜனவரி 22ம் தேதி படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News