Connect with us
radhika 1

Cinema News

அவங்களாம் படிச்சு சிகரம் தொட்டாங்க! படுத்தவங்க? ராதிகாவை வெளுத்து வாங்கிய பிரபலம்

Actress Radhika: சில தினங்களாக பாலியல் ரீதியாக நடக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. பல நடிகைகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அதிலும் ராதிகா தொடர்ந்து பேட்டி கொடுத்தும் வருகிறார்.

அவர் பேசிய விஷயங்களில் முரண்பாடுகள் இருப்பதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார். இதோ சேகுவேரா பகிர்ந்த தகவல்கள்: இந்த விஷயம் பற்றி முதலில் பேசியது பாவனா என்ற நடிகை. அவங்கதான் துணிச்சலா இந்த மாதிரி எனக்கு நடந்திருக்குன்னு சொன்னாங்க. ஆனா ராதிகா பேசும் போது எனக்கும் கூட அப்படி நடந்துருக்குன்னு சொல்றாங்க.

இதையும் படிங்க: மட்ட சாங்க அஜித்கிட்ட காட்டுனதும்.. தல ரியாக்‌ஷன் குறித்து வெங்கட் பிரபு

ஆனா அவங்க வாய தொறந்து பேசவே இல்ல. பாவனாக்கு இருந்த தைரியம் ராதிகாவுக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு ராதிகா வந்து அடுத்தடுத்த பேட்டிகளில் பார்க்கும் பொழுது என்ன தீர்வு சொல்றாங்கன்னு கூட நமக்கு தெரியல. ராதிகாவோட நேற்றைய போட்டிகளும் இன்றைய போட்டிகளையும் பார்க்கும் பொழுது அவர் எதை நோக்கி சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை.

பேட்டி கொடுக்கிறது பெரிசு இல்ல. எல்லாருமே கொடுக்கலாம். ஆனால் இரண்டு பேட்டிகளை பார்க்கும் பொழுது எந்த தீர்வை நோக்கி அவர் சொல்லிக் கொண்டு வருகிறார் என்று தான் புரியவில்லை. நடிகைகள் பேசக்கூடாதுனு சொல்றாங்களா? இப்படித்தான் இருக்குது ராதிகாவோட பேட்டி. நேற்று ஒரு பேட்டியில் பேசும்போது விஷாலை மையப்படுத்தியேதான் ராதிகா பேசுகிறார்.

இதையும் படிங்க:ஸ்ரீதேவியோட ஏன் நடிக்கல?… நக்கலாக பேசிய பாலகிருஷ்ணா

அதாவது விஷால் செருப்பை எடுத்து அடிங்கன்னு சொன்னாரு. உடனே இவங்களும் youtubers தான் அப்படி பேசுறாங்க. அவங்கள போய் செருப்பை எடுத்து அடிக்க முடியுமா? போய் அடி. நானும் துடைப்பத்த தூக்கிட்டு வரேன்னு சொல்றாங்க. அது மட்டும் இல்லாம நேற்றைய பேட்டிகளில் வைத்து பார்க்கும் போது இந்த மாதிரி விஷயம் நடக்கிறது எல்லாம் சகஜம்தான் அப்படிங்கிற மாதிரி ராதிகா பேசியிருக்காங்க.

மேலும் ராதிகா பேசும்போது கமலா ஹாரிஸ் அங்க போயிருக்காங்க. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்காங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா நாம எதை பத்தி பேசிட்டு இருக்கோம் என கேட்கிறார். இதற்கு பதில் அளித்த பத்திரிக்கையாளர் சேகுவேரா அவங்கள பத்தி பேசறதும் நாங்க தான். அவங்கள பத்தி பேசுறதும் பத்திரிகையாளர்கள் தான்.

இதையும் படிங்க:இதுக்குத்தான் ‘வாழை’ய விழுந்து, விழுந்து பாராட்டினீங்களா?

அவங்க எல்லாம் படிச்சாங்க. மேல போயிட்டாங்க. படுத்தவங்கள பற்றி பேசிக்கிட்டு இருக்கோம். படிச்சா பிரச்சனை இல்லை. நீங்களும் கூட அவங்கள மாதிரி ஆயிருக்கலாம். சுனிதா வில்லியம்ஸ் ஆகி இருக்கலாம். கமலா ஹாரிஸ் மாதிரி ஆயிருக்கலாம். இதுதான் உண்மை.

அவங்களை எதுக்கு இந்த விஷயத்துக்கு உதாரணமாக இழுக்குறீங்க? அவங்கள பத்தியும் பேசி இருக்கு இதே பத்திரிக்கை,ஊடகம். உங்கள பத்தியும் பேசுது. எனக்கும் நடந்திருக்குன்னு நீங்க சொல்றீங்களே? சுனிதா வில்லியம்ஸ் சொல்லவே இல்லையே. கமலஹாரிஸ் சொல்லவே இல்லையே. நீங்க ராதிகா தான சொல்றீங்க. எனக்கும் நடந்திருக்கு இதே மாதிரி. ராதிகா நல்லா ஒன்னும் புரிஞ்சுக்கணும். படித்தால் வெகுமானம். படுத்தால் அவமானம் என சேகுவேரா அந்த ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top