Categories: latest news Review

அஜித்தின் விடாமுயற்சி வெற்றியா? இல்ல வீண் முயற்சியா?.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்..

Actor Ajith: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களின் காத்திருப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இன்று உலகமெங்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.

விடாமுயற்சி திரைப்படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆரவ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளிலும் ரீலீஸ் ஆகி இருக்கின்றது. படம் ஃப்ரீ புக்கிங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் படத்திலிருந்து வெளியான டீசர், பாடல், டிரெய்லர் அனைத்துமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்தின் வெவ்வேறு விதமான லுக் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் படமாக இருக்கும் என்று மகிழ் திருமேனி கூறியிருந்தார்.

விடாமுயற்சி ட்விட்டர் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து படம் குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. படத்தின் முதல் பகுதி மிகச் சிறப்பாக இருக்கின்றது.

திரிஷா மற்றும் அஜித் இருவரின் காட்சிகளும் மிகவும் அருமையாக வந்திருக்கின்றது. முதல் பகுதியில் இருக்கும் திருப்பங்கள் மற்றும் செகண்ட் பகுதியில் இருக்கும் கார் ஃபைட் சீன் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் படத்தில் இருக்கிறது. படத்தின் கதை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் அதை எடுத்த விதம் மிகச் சிறப்பாக இருந்திருக்கின்றது.

படத்திற்கு பாடல்கள் மற்றும் பிஜிஎம் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது. படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் குறைந்த காட்சிகளில் த்ரிஷா வந்தாலும் அவரின் போஷன் மிகவும் கெத்தாக இருக்கின்றது. படத்தில் நடக்கும் மொத்த பிரச்சனைக்கும் திரிஷா தான் காரணமாக இருக்கின்றார்.

நடிகர் அஜித்குமாருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்து. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கின்றது. படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும். கேமரா வேலைகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் இருக்கின்றன.

ஒரு வழியாக அஜித்குமார் லைக்கா நிறுவனத்தை காப்பாற்றி விட்டார் என்று தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஒரு சிலர் படத்தின் இரண்டாவது பாதி ஸ்லோவாக இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் படத்தின் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது சில ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.

ramya suresh
Published by
ramya suresh