Categories: latest news Review

தக் லைப்-பில் பேர் வாங்கிய சிம்பு!. ஆண்டவர் ஆளையே காணோம்!.. ஐயோ பாவம்!..

Thug life simbu: மணிரத்னமும், கமலும் இணைந்து உருவாக்கியுள்ள தக் லைப் திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது. முதல் பாதி பார்த்தவுடனே பலரும் ‘சுவாரஸ்யமாக ஒன்றுமில்லை.. மோசமாக இருக்கிறது’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். முழுப்படத்தையும் பார்த்துவிட்டு முதல் பாதி வேஸ்ட். இரண்டாம் பாதி டோட்டல் வேஸ்ட் என பதிவிட்டார்கள்.

படம் பார்த்துவிட்டு வந்தவர்களோ ‘படம் நன்றாக இல்லை. படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கமல், சிம்பு இருவரையும் மணிரத்னம் சரியாக பயன்படுத்தவில்லை’ என சொல்லி வருகிறார்கள். அதேநேரம், சிம்புவின் நடிப்பும், ஸ்கிரீன் பிரசன்சும் பலருக்கும் பிடித்திருக்கிறது.

சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். சிம்பு மிகவும் துள்ளலாக நடிப்பார். நன்றாக நடனம் ஆடுவார். அவருக்கு பிடித்தமான இயக்குனர் மற்றும் காட்சிகள் கிடைத்தால் பின்னியெடுத்துவிடுவார். அவரின் விண்ணை தாண்டி வருவாயா மற்றும் மாநாடு படங்களை பார்த்தால் இது தெரியும்.

வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் ஓடவில்லை என்றாலும் சிம்புவின் நடிப்பை குறை சொல்லவே முடியாது. மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார் சிம்பு. சிம்பு மிகவும் மதிக்கும் இயக்குனர் மணிரத்னம். எதையும் சரியாக திட்டமிட்டு எடுப்பவர் என்பதால் சொன்ன நேரத்திற்கு முன்பே ஷூட்டிங் வந்துவிடுவாராம் சிம்பு.

தக் லைப் படத்திற்கு தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் சிம்பு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால், படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே, சிம்புவின் உழைப்பும் வீணாகவே போய்விட்டது என்கிறார்கள் சிலர். தக் லைப் படத்தை காப்பாற்ற சிம்பு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார் என படம் பார்த்தவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

சிம்பு அவரின் வேலையை சரியாகவே செய்திருக்கிறார். மணிரத்னம் கதையை, காட்சியை இன்னும் நன்றாக எழுதியிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். இந்த படத்திலும் சிம்புவுக்கு நல்லது நடக்காமல் போய்விட்டது என சிலர் ஃபேஸ்புக்கில் எழுதி வருகிறார்கள்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா