Criminal Justice2: கிரிமினஸ் ஜஸ்டிஸ் இரண்டாவது சீசன் எப்படி இருக்கும் என்ற பாசிட்டிவ், மைனஸ் பேசும் விமர்சனம் இங்கே.
பிரபல பாலிவுட் நடிகை பங்கஜ் திரிபாதி, ஜிசு செங்குப்தா, கிரித்தி குல்ஹரி உள்ளிட்டோர் நடித்து உள்ளது கிரிமனல் ஜஸ்டிஸ் சீசன் 2. மும்பையில் வசிக்கும் அனு சந்திரா, பிரபல வக்கீல் பிக்ரம் சந்திராவின் மனைவி. அவர்களுக்கு ரியா என்ற 12 வயது மகள். வெளியிலிருந்து பார்த்தால் சீரான குடும்பம் போல தெரிகிறது. ஆனால் உண்மையில், அனு உள்ளுக்குள்ளே கவலை, மன அழுத்தம், பயம் ஆகியவற்றுடன் வாழ்கிறாள்.
ஒரு இரவு, பிக்ரம் ஒரு முக்கியமான வழக்கை வென்று திரும்புகிறார். அந்த இரவில் அவர் அனுவுடன் இருந்தபோது, அனு திடீரென சமையலறை கத்தியால் அவரை குத்துகிறாள். தானே போலீசுக்கு அழைக்கிறாள், இரவு தெருக்களில் ரத்தமோடு நடக்கிறாள். கைது செய்யப்பட்டதும் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள்.
இந்த சம்பவம் நாடு முழுக்க பேசப்படுகிறது. மக்கள் எல்லாம் அனுவை கொடூரமானவளாக பேசுகிறார்கள். எந்த வக்கீலும் அனுவுக்கு வாதிட வரவில்லை. அந்த நேரத்தில் மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரு சாதாரண வக்கீல் மாதவ் மிஸ்ரா, அவருடைய உதவியாளர் நிகத் ஹுசைனுடன் சேர்ந்து இந்த வழக்கை எடுத்து கொள்கிறார்.
வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும், பிக்ரம் ஒரு அழகான முகத்துக்குப் பின்னால் ஒரு கொடூரமான மனிதர் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அனுவை மனதளவில் தாக்க, கண்காணிக்க, கட்டுப்படுத்த பிக்ரம் பல ஆண்டுகளாக சில யுத்தியை பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும், பிக்ரம் அவள்மீது துன்புறுத்தல் மட்டுமல்லாமல், திருமணத்திற்குள் அனுமதியில்லாமல் உறவுகொள்ளும் தவறும் செய்துள்ளார். ஜெயிலில் அனு இன்னும் கஷ்டங்கள் அனுபவிக்கிறாள். ஆனால் மெதுவாக, ஒரு துணிச்சலான பெண்மணியாக மாறுகிறாள்.
மாதவ் மற்றும் நிகத், நீதிமன்றத்தில் உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். மகள் ரியா சொல்வது, டிஎன்ஏ சான்றுகள் எல்லாம் பிக்ரத்தின் போலி முகத்தை பிய்த்து கிழிக்கிறது. இறுதியில், இது ஒரு கொலை இல்லை. இது ஒரு பெண் அடைந்த மனதளவான துன்பங்களைப் பற்றிய வழக்காக தீர்ப்பு வருகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…