Categories: latest news Review

ஃபுட்டேஜூக்காக படம் எடுத்துருக்காங்க… பார்க்குறவனுக்கு டைம் வேஸ்ட்… DNAவைக் கிழித்த புளூசட்டைமாறன்

டிஎன்ஏ படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். அதர்வா நடித்துள்ள இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தைப் பற்றி புளூசட்டைமாறன் என்ன விமர்சனம் சொல்றாருன்னு பாருங்க.

படத்தோட ஆரம்பத்துல ஹீரோ லவ் பெய்லியர்ல சரக்கை போட்டு சுத்திக்கிட்டு இருக்காரு. ஹீரோயின் ரொம்ப வெள்ளந்தி. மனசுல பட்டதை அப்படியே பேசிடுவாங்க. எங்க என்ன பேசணும்னு தெரியாது. இதனாலேயே அவங்களை ஒரு மனநோயாளி மாதிரி நினைச்சி அவங்களுக்கு ட்ரீட்மெண்ட்லாம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதனாலேயே கல்யாணம் தள்ளிப் போய்க்கிட்டு இருக்கு.

இந்த ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அவங்க எதிர்பார்த்ததை விட நல்லாவே குடும்பம் நடத்துறாங்க. குழந்தையும் பிறந்துடுது. அங்கே தான் பிரச்சனையே. இது நம்ம குழந்தை இல்லைன்னு ஹீரோயின் கண்டுபிடிக்கிறாங்க. கூட இருக்குற யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க. ஆனா ஹீரோ அதர்வா மட்டும் பொண்டாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டு உண்மையா பொய்யான்னு செக் பண்ணுவோம். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துருவோம்னு பார்க்குறாரு. அங்கே இருந்து பிரச்சனை ஆரம்பிக்குது. அதுக்கு அப்புறம் என்னாச்சு? அப்படிங்கறதுதான் கதை.

இந்தக் கதையில என்ன பிரச்சனைன்னா குழந்தை காணாம போயிடுச்சு. இப்போ இவங்க கையில இருக்குற குழந்தை இவங்க குழந்தை இல்லைன்னு டிஎன்ஏ ரிப்போர்ட்டும் வந்துடுச்சு. இப்போ காணாமப் போன குழந்தை எங்கே போச்சு? கையில இருக்குற குழந்தை யாருடையது? அப்படிங்கறதைக் கண்டுபிடிக்க இன்வஸ்டிகேஷன் போகணும். இது ஹாலிவுட் சினிமா மாதிரி இருந்தா தான் பரபரப்பா இருக்கும். ஆனா அப்படி எதுவுமே நடக்கல.

ஆட்டோக்காரன் வருவான். அவன்கூட இன்னைக்கு ஒரு பூஜை நடக்கப்போகுது. நரபலி கொடுக்கப்போறாங்கன்னு பரபரப்பைக் கௌப்புவான். அந்தளவு போலீஸ் கூட பண்ணல. ஹீரோவும் பண்ணல. இதுக்கு முன்ன காமிச்ச ஹீரோ லவ் பெய்லியர்ல சரக்கைப் போட்டு சுத்திக்கிட்டு இருந்தாருல்ல. அந்தக் கதை என்னாச்சு? ஹீரோயின் மனநிலை சரியில்லன்னாங்க.

அந்தக் கதை என்னாச்சு? அது வந்து டைம் வேஸ்ட் தானே. ஃபுட்டேஜ்க்கு படம் எடுத்து வச்சிருக்காங்க. படம் பார்க்குறவனுக்கு டைம் வேஸ்ட் தானே. ஹீரோ, ஹீரோயின் கல்யாணம் முடிஞ்சி குழந்தை பிறந்தது. இதானே கதை. இதுக்கு எதுக்கு வேற கதை வேணும்? அப்புறம் படத்துல ஹீரோ போலீஸ்ல புகார் கொடுக்கிறாரு. அதோடு சரி. அப்புறம் அவரே அந்த டிபார்ட்மெண்டைக் கையில எடுத்துக்குறாரு. இவரு எடுக்குறதுதான் முடிவு. இவரு கிடைக்குறவனை எல்லாம் போட்டு அடிக்கிறாரு. காணாமப் போன குழந்தை எப்படியாவது இவங்களுக்குக் கிடைச்சிறணும்கற எண்ணமே நமக்கு வரல. இவரே ஹீரோ, வில்லன் மாதிரி நடிச்சிடுறாரே.

கடைசில கிளைமாக்ஸ்ல பழைய படம் மாதிரி எல்லாரும் ஒண்ணா நிக்கிறாங்க. சுபம்னு போடுவாங்க. அதே மாதிரி தான் இந்தப் படத்துல எல்லாரையும் ஒரு கோவில்ல நிக்க வச்சி சுபம்னு முடிச்சிருக்காங்க. நல்ல இன்வஸ்டிகேஷன் திரில்லரா எடுக்க வேண்டிய படத்தை ஹீரோ வில்லன் படமா மாற்றிக் கோட்டை விட்டுட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v