Categories: latest news Review

அடல்ட் காமெடி த்ரில்லர் படம் ஹவுஸ்புல் 5 எப்படி இருக்கு? உண்மையான வாரிசு யார்?

தமிழ்ல டபுள் மீனிங் காமெடி படங்கள் அதிலும் இரட்டை அர்த்த காமெடி மசாலா தடவிய படங்கள் பல வந்தள்ளன. ஹரஹர மகா தேவகி, உள்ளே வெளியே, இருட்டறைக்குள் முரட்டு குத்து, ஒங்கள போடணும் சார், கடலை போட ஒரு பொண்ணு வேணும், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, திரிஷா இல்லன்னா நயன்தாரா என பல படங்கள் வந்துள்ளன.

அந்த ரகத்தில் பாலிவுட்டில் வந்துள்ள படம் தான் ஹவுஸ்ஃபுல் 5. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா…தருண் மன்சுக்கானி இயக்கியுள்ள அடல்ட் காமெடி த்ரில்லர் படம் ஹவுஸ்ஃபுல் 5. நேற்று வெளியானது.

ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார், சஞ்சய் தத், நர்கிஸ் பாக்ரி, ஜேக்குலின் பெர்னான்டஸ், சோனம் பஜ்வா என 3 கதாநாயகிகள் உள்பட பலர் நடித்துள்ளனர். கவர்ச்சிக்கு சித்ரங்டா சிங் நடித்துள்ளார். சர்தார் படத்தின் வில்லன் சன்ங்கி பாண்டே தான் இதிலும் வில்லன்.

கப்பல்ல அப்பாவோட 100வது பிறந்தநாளை பெரிசாக் கொண்டாடலாம்னு பசங்க திட்டம்போடுறாங்க. இதுல உண்மையான வாரிசு, முதல் வாரிசு யாருன்னு குழப்பம் வருகிறது. டிஎன்ஏ சோதனை போட ரெடி பண்றாங்க. டாக்டர் சோதனை போடுற நேரத்துல அவரைப் போட்டுத் தள்ளிடுறாங்க. இப்ப கொலைகாரன் யாரு, வாரிசு யாருன்னு கண்டுபிடிக்கணும். அதுதான் கதை.

முதல் பாதியை மாதிரி 2ம் பாதியில் சுவாரசியம் இல்லை. அடல்ட் காமெடியை மட்டுமே நம்பி படத்தை எடுத்துள்ளனர். காட்சி அமைத்த விதம் சூப்பர். ஒளிப்பதிவு அருமை.

படத்தின் இசை அமைப்பாளர் யnh யோ ஹனி சிங். இவரது இசையில் லால் பாரி பாடல் மட்டும் கேட்கலாம். ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ அதகளம் பண்ணுகிறார். படத்தில் வில்லன் யார் என்று தெரிய வரும் காட்சி தான் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. அடல்ட் காமெடி ரசிகர்கள் கொண்டாடலாம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v