Categories: latest news Review

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் கலக்கல் காமெடியா? படம் வொர்த்தா? வேஸ்ட்டா?

பாபி பாலசந்திரன் தயாரிப்பில் விக்ரம் ராஜேஷ்வர் அருண் கேசவ் இயக்கிய படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இன்று வெளியாகி உள்ளது. வைபவ், அதுல்யா, மணிகண்டன், ராஜேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ரெடின்கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி சரவெடிதான். படத்தைப் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

வங்கி கொள்ளையைப் பற்றி காமெடியாக எடுத்த படம். வைபவ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சுனில்னு எல்லாரும் கலக்கலா நடிச்சிருக்காங்க. முதல் பாதியை விட இரண்டாவது பாதி ரொம்ப காமெடியாக இருக்கு.

என்டர்டெயின்மெண்டுக்காக படம் பார்க்க குடும்பத்தோட ஜாலியா போகலாம் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். படம் ஃபுல்லா என்ஜாய்மெண்ட்தான். சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். படம் பார்த்தவர்கள் அனைவருமே பாசிடிவான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். கொடுத்த காசுக்கு படம் ஒர்த்தான்னு கேட்கும்போது ஒர்த் தான்னு சொல்றாங்க.

லவ், ஏக்கம் பர்ஃபார்மன்ஸ் சூப்பரா பண்ணிருக்காங்க. எனக்கே ரெண்டு மூணு இடத்துல கண்கலங்கிடுச்சுன்னு சொல்கிறார். அதே போல பிரேம்ஜி படம் நல்லா சூப்பரா இருந்துச்சு. சூப்பர் காமெடி பிலிம்னு தெரிவித்துள்ளார்.

நாசர் சொல்லும்போது இந்தப் படத்தைக் காதை மூடிக்கிட்டு கேட்டா இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு. ரொம்ப புதுசா அழகா பண்ணிருக்காங்க. ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும்போது அடுத்து என்னன்னு யூகிக்க முடியாது. இது புது டைப் காமெடி என்கிறார்.

காமெடி படங்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் அது மொக்கையாக இருக்கக்கூடாது. அதே நேரம் படத்தில் அது கொஞ்சம் புதுசாக இருந்தாலும் ஆடியன்ஸ் அதை பிக்கப் பண்ண லேட்டாகலாம். எது எப்படியோ படம் ஒர்த்தா இருந்தா சரிதான். தியேட்டர்ல போய் ஜாலியா பாருங்க.

ருத்ரா, துணிவு வரிசையில் வங்கி கொள்ளையைப் பற்றிய படமாக வந்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் இனி வரும் நாள்களில் வெற்றி வாகை சூடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v