Categories: latest news Review

ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு?.. சுடச்சுட விமர்சனம் இதோ!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு 4வது சீசனில் எப்படி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஆரி அர்ஜுனன் டைட்டிலை வென்றாரோ அதே போல 5வது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து மக்கள் வாக்குகளில் முன்னிலை வகித்து டைட்டில் வென்ற ராஜு ஜெயமோகன் படங்களை இயக்கப் போவதாக அறிவித்தார். வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் இவரை வாழ்த்திய நிலையில், அவர் தயாரிப்பில் படம் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ஹீரோவாகவே பன் பட்டர் ஜாம் படத்தில் நடித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ரிலீஸையும் செய்துள்ளார். பிக் பாஸ் ராஜு தனது பேச்சால் அபிஷேக் ராஜாவையே ஆஃப் செய்ததை பிக் பாஸ் வீட்டில் பார்த்திருப்போம். அதே பேச்சுத் திறமையுடன் நன்றாக நடிக்கக் கூடிய நபர் நான் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஆதியா, பாவ்யாத்ரிகா என 2 ஹீரோயின்களுடன் அவர் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க, ஆதியாவின் அம்மா தேவதர்ஷினியும் ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர்.

அரேஞ்ச் மேரேஜை அம்மாக்களே லவ் மேரேஜாக மாற்ற முயலும் போது, ராஜுவுக்கும் பாவ்யாவுக்கும் இடையே கல்லூரியில் காதல் மலர், கடைசியில் அம்மா பார்த்த பெண்ணை ராஜு திருமணம் செய்தாரா? அல்லது தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா? என்கிற ட்விஸ்ட்டுடன் படத்தை சுபம் போட்டு முடித்துள்ளனர்.

விஜய் டிவி பப்புவின் காமெடி காட்சிகள், விக்ராந்தின் கேமியோ, சார்ளியின் நிதானமான நடிப்பு படத்துக்கு பக்க பலமாக இருந்துள்ளது. சில இடங்களில் வரும் அடல்ட் காட்சிகள் மற்றும் இளைஞர்களை கவர்வதற்காக செய்த சில லாஜிக் மீறல்கள் படத்தை சற்றே தொய்வடைய செய்கிறது.

முதல் பாதி ரொம்பவே லெந்தாக நகர்வது படத்துக்கு பிரச்சனையாக மாறிவிடுகிறது. ஆனால், 2ம் பாதியில் படத்தை அங்கே சுற்றி, இங்கே சுற்றி ஒரு வழியாக வட்டத்துக்குள் கொண்டு வந்து முடித்து விட்டனர். இந்த ஆண்டு தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வரிசையில் பன் பட்டர் ஜாம் ஹிட் அடிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் வெளியான மற்ற படங்களை வசூல் ரீதியாக இந்த படம் வெல்லும் என்பது தெளிவாக தெரிகிறது.

பன் பட்டர் ஜாம் ரேட்டிங்: 3.25/5

Saranya M
Published by
Saranya M