Categories: latest news Review

தனுஷ்கிட்ட அமீர்கான் கத்துக்கணும்!.. குபேரா டாப் நச் பர்ஃபாமன்ஸ்!.. டிவிட்டர் முதல் ரிவ்யூ!…

Kuberaa Review: சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் அடித்து சோஷியல் திரில்லராக உருவாகியிருக்கும் படம்தான் குபேரா. இந்த படம் வருகிற 20ம் தேதி தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே, இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை பின்னணியில் சம்பவங்கள் நடப்பது போல கதையை எழுதி இருக்கிறார் சேகர் கம்முலா. இதில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா ஆகிய எல்லோருமே இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதை அவர்கள் இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

அதுவும் குபேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். அவரின் தோற்றமே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் டீசரும், சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் ஹைப் ஏற்றியிருக்கிறது. ஒரு பணக்கார வில்லனுக்கும், ஒரு நேர்மையானவருக்கும் இடையே தனுஷ் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

இந்நிலையில், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களை டிவிட்டரில் விமர்சித்து வரும் உமைர் சாந்து என்பவர் குபேரா படம் பற்றி பதிவிட்டிருக்கிறார்.

ஒரு பவர்புல் கிரைம் திரில்லர். நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை என்கேஜாக இருக்கிறது. கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம். எப்படி நடிப்பது என தனுஷிடம் அமீர்கான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என நக்கலடித்திருக்கிறார்.

இந்த அமைர் சந்து தக் லைப் படம் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பே படம் நன்றாக இருப்பதாக பதிவிட்டார். அப்போதே அவர் படம் பார்த்துவிட்டுதான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் வந்தது. இப்போது குபேரா படம் பற்றி பேசியிருக்கிறார். உண்மையிலேயே இவர் படம் பார்த்தாரா என்பது தெரியவில்லை. இவர் நம்மூர் பயில்வான் ரங்கநாதன் போல பாலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க பற்றி தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வருபவர். அதேபோல், பாலிவுட் படங்களை மட்டம் தட்டி தமிழ் சினிமாக்களை பாராட்டியும் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா