Categories: Cinema News latest news

தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங்குக்கு அந்த ரோல் தானா?.. இப்படி வெறித்தனமா ரெடியாகுறாரே!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த படத்துக்காக ரெடியாகி வரும் ரித்திகா சிங் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திக் கொடுத்து மாஸ் காட்டியது. விஜய் – அஜித் என இருந்த கிளாஷ் எல்லாம் காணாமல் போய் விஜய் – ரஜினி என்கிற நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..

விஜய் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூல் ஈட்டிய நிலையில், ஜெயிலர் படமும் 600 கோடி வசூலை ஈட்டியுள்ளது. 72 வயதிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இளம் தலைமுறை நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே உள்ளார்.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் நடித்து வரும் தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங்கும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டு போன சந்திரபாபு!. பங்கமாக கலாய்த்த எம்.ஜி.ஆர்!. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்டு!..

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளியான இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்த ரித்திகா சிங் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவிலும் அரை டவுசரை மாட்டிக் கொண்டு கவர்ச்சி தெறிக்க பாக்ஸிங் பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தலைவர் 170 படத்திலும் இதே ரோலில் தான் ரித்திகா சிங் நடித்து வருகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C0ZDvxxvCuE/

Saranya M
Published by
Saranya M