90 கோடி கடனில் சிக்கிய கருப்பு?.. கதறி அழுது வீடியோ போட்ட ஆர்ஜே பாலாஜி.. சூர்யாவின் நிலைமை பாவம்!..

 
90 கோடி கடனில் சிக்கிய கருப்பு?.. கதறி அழுது வீடியோ போட்ட ஆர்ஜே பாலாஜி.. சூர்யாவின் நிலைமை பாவம்!..

தமிழ் திரைப்படமான கருப்பு வெளியீட்டைச் சுற்றியுள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி கண்ணீருடன் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகததால் தியேட்டர்களுக்கு வெளியே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய சூழ்நிலைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தயாரிப்பாளர்கள் அனைத்து தடைகளையும் சரிசெய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பல சவால்களை சந்தித்துள்ளது. ஆனால் கடவுளின் அருளால் அவற்றை எல்லாம் கடந்து 32 மாதங்களுக்குப் பிறகு இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். இந்த முறையும் அவர் நம்மை கைவிட மாட்டார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கருப்பன் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிவான். கருப்பு நாளை காலை சிறப்பாக வெளியாகும். நம்பிக்கை வையுங்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

இந்நிலையில், சற்றுமுன் பதிவிட்ட வீடியோவில் ஆர்.ஜே.பாலாஜி, “எல்லா ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். படத்தை பார்க்க அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து ஏமாந்திருப்பீர்கள். மேலும், “இந்தப் படத்தை நான் இயக்கியிருக்கிறேன். அதனால் இந்த நிலைமை மிகவும் வேதனை அளிக்கிறது. பேசும்போதும் அழுகை வருகிறது” என வருத்தத்துடன் கூறியுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் இன்று மாலை 6 மணிக்குள் சரியாகி, படம் வெளியாகும் என்று நம்புகிறோம். கடவுளை நம்புகிறேன், அவர் அனைத்தையும் சரி செய்து விடுவார்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

From Around the web