Categories: Cinema News latest news

நானும் உதயநிதியும் ஒரே வீட்ல பொண்ணெடுத்தோமா?.. திடீரென டென்ஷனான ஆர்ஜே பாலாஜி.. என்ன ஆச்சு?

குடியரசு தினத்தை டார்கெட் செய்து தங்கலான் வெளியாகாத நிலையில், அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு தனது சிங்கப்பூர் சலூன் படத்தை வெளியிட ஆர்ஜே பாலாஜி முடிவு செய்துள்ளார். நேற்று சென்னையில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட சிங்கப்பூர் சலூன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஏற்கனவே கோலிவுட்டிலும் நெப்போடிசம் இருக்கிறது என பேசிய ஆர்ஜே பாலாஜி அந்த விழாவில் நானும் உதயநிதியும் ஒரே வீட்ல பொண்ணு எடுத்தோம்னு சொல்லியிருந்தேன். ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில படம் பண்றோம் என்பதைத்தான் அதன் மூலம் சொல்ல வந்தேன். உடனே யூடியூப்பில் நானும் உதயநிதியும் சகல பாடி என்றே தம்ப்நெயில் வைக்க ஆரம்பித்து விட்டனர். அடப்பாவீங்களா எங்கே இருந்துடா வரீங்க என அந்த மேடையிலேயே விளாசி இருந்தார் ஆர்ஜே பாலாஜி.

இதையும் படிங்க: அடிவாங்கிய அன்னபூரணி.. இதுக்கு மேல முடியாது!.. பெரிய கும்பிடு போட்டு மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!..

அதை தொடர்ந்தும் ஒரு பிரபல தனியார் டிவி அதே போல டைட்டில் வைத்த நிலையில், கடுப்பான ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செய்தியை ஷேர் செய்து வாந்தி வருது என எமோஜி போட்டு வெளுத்து விட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சிங்கப்பூர் சலூன் படத்திற்கான புரமோஷன் ஸ்டன்ட்டாகவே இதெல்லாம் இருக்கிறதே என்றும் மன்சூர் அலி கான் மாதிரி ஆர்ஜே பாலாஜியும் தனது படத்தை ஓட வைக்க ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார். வீட்ல விசேஷம் படம் ஓடாமல் போனதை போல இந்த படம் அடிவாங்குமா? என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்த்திபனுக்கே போட்டியா மாறிய ஹன்சிகா!.. உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம்.. 105 மினிட்ஸ் டிரெய்லர்!

எல்கேஜி, நயன்தாராவுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ஓடின. ஆனால், வீட்ல விசேஷம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆர்ஜே பாலாஜி இணைந்து நடித்த ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் ஓடவில்லை.

Saranya M
Published by
Saranya M