Categories: Cinema News latest news

திரும்பவும் ரோஜா படமா….? இவங்க இருக்கும் போது ரொமான்ஸ்க்கும் பஞ்சமிருக்காது…..வைரலாகும் வீடியோ…!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தற்போது தெலுங்கில் தயாராகி வரும் புதியபடம் காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சிவ நிர்வாணா இயக்குகிறார். இது ஒரு திரில்லர் கலந்த காதல் கதையாக அமைய இருக்கிறதாம். அதற்காக ஒரு ரொமான்டிக்கான காதல் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் 1992 ஆம் ஆண்டில் வெளியான மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி- மதுபாலா நடிப்பில் உருவான “ரோஜா” படத்தை தழுவி இந்த படம் உருவாகபோகிறதாம். ரோஜா படத்தின் 60 % கதையை இந்த படத்தில் வைக்கப்போகிறார்களாம். அதற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

இதையும் படிங்கள் : ஃபுல்லா கவர் பன்னாலும் அங்கமட்டும் ஓப்பன்…ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த கனிகா…

இந்த படம் இப்ப உள்ள தலைமுறையினருக்கு மீண்டும் அந்த காதல் கதையை சற்று வித்தியாசமாக கூறுவதற்கு இயக்குனர் எடுக்கும் புதிய முயற்சி என திரை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் ஹீரோயின் ரோலுக்காக முதலில் அணுகியது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. ஆனால் ஹிந்தியில் அவர் பிஸியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை.

அவருக்கு பதிலாக நடிகை சமந்தாவை கமிட் பண்ணியது படக்குழு. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறதாம். ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பற்றிய அறிமுகத்தையே திர்ல்லிங்காக வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழு. அந்த வீடியோவை பார்க்கும் போது ரோஜா படத்தின் சாயலும் தெரிகிறது.

இதோ அந்த வீடியோ:

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini