Categories: Cinema News latest news

நீங்களே இப்டி லீக் செஞ்சிடீங்களே.? கமல் அண்ணனுக்கு நன்றி கூறி மாட்டிக்கொண்ட ‘ரோலக்ஸ்’ சூர்யா.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் விக்ரம். படம் பார்த்த பல ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டது என்றே கூறிவருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களை போல தனக்கென தனி சினிமா உலகத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். தொடர்ந்து தனது சினிமா உலகத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கைதி இரண்டாம் பாகம், விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், பஹத் பாசிலும் தங்களது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். அதைப்போல கடைசி 5 நிமிடம் கெஸ்ட் ரோலில் வரும் சூர்யாவும் கடைசி நேரத்தில் மாஸ் காட்டிவிட்டார். இதனையடுத்து, விக்ரம் படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்திற்கு பெரிதளவு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார் சூர்யா.

அதில் ” அன்புள்ள கமல் அண்ணா எப்படி சொல்றதுஉங்களுடன் திரையில் வரவேண்டும் என்ற கனவு இப்போது நனவாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதைச் செய்ததற்கு நன்றி அத்தனை அன்பையும் கண்டு பூரித்து போகிறேன் என ரோலக்ஸ், விக்ரம் என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- விக்ரம் படத்தின் அந்த பிரிண்ட் எப்போது வருமோ.?! காத்திருக்கும் ரசிகர்கள்.! இதுதான் கரணம்.!

இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதை படக்குழு பெயரை வெளியீடாமல் சஸ்பென்சாக வைத்திருந்தார்கள். . ஆனால், சூர்யா இன்று போட்ட ட்வீட்டில் விக்ரம் படத்தில் தனது பெயர் ரோலக்ஸ் என்பதை உறுதிப்படுத்திவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களே இப்டி லீக் செஞ்சிடீங்களே.? என கூறி வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan