">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தென்னிந்தியாவில் முதல் சினிமா பாடல்.. யுடியூப்பில் ரவுடி பேபி செய்த புதிய சாதனை…
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வீடியோ யுடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம் பெற்ற ‘ ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது. யுடியூப்பிலும் இந்த வீடியோ மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன அசைவுகளை அமைத்திருந்தார்.இந்த பாடலை இதுவரை 11 கோடியே 87 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதுவே மிகப்பெரிய சாதனை ஆகும்.
இந்நிலையில், இந்த பாடல் வீடியோவை இதுவரை 5 மில்லியன் (50 லட்சம்) பேர் லைக் செய்துள்ளனர். தென்னிந்தியாவில் இதுவரை எந்த பாடல் வீடியோவும் இதுவரை இவ்வளவு லைக்குகளை பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.