×

தனது ஸ்பார்க்கை நிருபித்துக் காட்டிய ருத்துராஜ் – தவறை ஒத்துக்கொண்ட தோனி!

சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

 

சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பேசிய தோனி அவர்களிடம் ஸ்பார்க் இல்லை எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். வாய்ப்பே கொடுக்காமல் எப்படி அவ்வாறு கூறலாம் என கொதித்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். இதையடுத்து இப்போது ருத்துராஜ் தொடர்ந்து இரண்டு அரைசதங்களை அடித்து தனது ஸ்பார்க்கை நிருபித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

வெற்றிக்குப் பின் தோனி பேசிய போது ‘ருத்துராஜ் பேட்டிங்கை வலைப்பயிற்சியில் ஆடும்போது பார்த்திருக்கிறோம். அதன் பிறகு கரோனாவினால் பாதிக்கப்பட்டு  20 நாட்கள் கழித்தே அணிக்குத் திரும்பினார்அவரின் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால் அவர் அதிகமாக பேசக்கூடியவர் அல்ல. அதனால் அவர் எப்படிப்பட்டவர் எனக் கணிக்க நிர்வாகத்தால் முடியாமல் போனது. முதலில் அவர் அழுத்தத்தின் காரணமாக இறங்கி வந்து அடித்து அவுட் ஆனார். ஆனால் இப்போது அவர் விருப்பத்துக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் ஷாட்களை அடிக்கும் வல்லமைப் பெற்றுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News