Categories: Cinema News latest news

என்ன கேக்காமலேயே எல்லாம் செஞ்சிட்டாங்கய்யா.! பொது மேடையில் வருத்தப்பட்ட விஜயின் தந்தை.!

தமிழ் சினிமாவில் பல சங்கங்கள் உள்ளன. இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், திரைப்பட தொழிலாளர்களுக்கான ஃபெப்சி எனும் தொழிலாளர் சங்கம், டப்பிங் யூனியன், இசை கலைஞர்கள் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கத்தில் தலைவர், செயலாளர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் பொறுப்ப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

அந்த சங்க தேர்தல்கள் நம்ம பொது தேர்தல்களையே மிஞ்சும் அளவிற்கு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். அப்படி ஒரு நிகழ்வு தான் அண்மையில் நடைபெற்ற இயக்குனர் சங்க தேர்தலில் நடைபெற்றது.

அதில், இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான இமையம் எனும் அணியும் , ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டனர். இதில், ஆர்.கே.செல்வமணி அணி அண்மையில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்களேன் – என்னது குக் வித் கோமாளி புகழை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிட்டாங்களா.?! புயலை கிளப்பிய டிவீட் இதோ.!

அதாவது, கே.பாக்யராஜ் அணி இமயம் என கூறிக்கொண்டது. அதனால், இயக்குனர் இமயம் பாரதிராஜா இவர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல பிம்பத்தை உண்டுபண்ணியது. ஆனால், உண்மையில், பாரதிராஜாவுக்கு இதில் உடன் பாடு இருக்காது. அவர் என்னிடம் கூறி வருத்தப்பட்டார் என பொதுமேடையில் கே.பாக்யராஜ் அணியை பற்றி பேசினார்.

பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் பங்குபெறும் பொது தேர்தல் வெற்றிகள் கூட இவ்வளவு கூச்சல், கொண்டாட்டம் என இருப்பதில்லை சில ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இந்த தேர்தலுக்கு இவ்வளவு ஆர்பாட்டமா என ரசிகர்கள் சலித்து கொள்கின்றனர்.

Manikandan
Published by
Manikandan