Categories: Cinema News latest news throwback stories

இது சரிபட்டு வராது.! விஜயை காப்பாத்த அவரால் மட்டும் தான் முடியும்.! SAC எடுத்த அதிரடி முடிவு.!

தற்போது தமிழகத்தில்  அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் என்றால் அது தளபதி விஜய் தான் என்று கூறலாம். அவரது பிறந்தநாள் இன்னும் ஒரு சில நாட்களில் வந்துவிடும் அதற்காக தற்போதே வெறித்தனமாக தயாராகி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

இந்த சமயம் அவரை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் அவர் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவில் வெற்றியை ருசித்தார் என விஜயின் உறவினரும் .  மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

முதலில் விஜய் நடிக்க வேண்டும் என கூறியதும். முதல் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கினார். நாளைய தீர்ப்பு என விஜயின் முதல் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

உடனே எஸ்.ஏ.சி அடுத்ததாக இது சரிப்பட்டு வராது. விஜயை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இப்பொது விஜியால் (விஜயகாந்த்) மட்டுமே முடியும் என கூறினாராம். உடனே எஸ்.ஏ.சி விஜயகாந்தை சந்தித்து விஜய் உடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளவே ,

இதையும் படியுங்களேன் – பெண்ணை கட்டி புடிக்க சொன்னேன்.. பெத்த புள்ளகிட்ட இப்டிலாமா சொல்வார் நம்ம மன்சூர் அலிகான்.!?

தனக்கு மிக பெரிய ஹிட்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பதால் விஜயகாந்த் உடனே ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தான் செந்தூரபாண்டி திரைப்படம் உருவானது. எதிர்பார்த்தபடி விஜயின் முகம் தமிழக மக்களுக்கு இந்த படத்தின் வெற்றி மூலம் பரிட்சையமானது. விஜயகாந்த் உடன்  நடித்த பையன் என சாமானிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தெரிந்த முகமானாராம் விஜய். இதனை அந்த நேர்காணலில் சேவியர் பிரிட்டோ தெரிவித்திருந்தார்.

Manikandan
Published by
Manikandan