பெண்ணை கட்டி புடிக்க சொன்னேன்.. பெத்த புள்ளகிட்ட இப்டிலாமா சொல்வார் நம்ம மன்சூர் அலிகான்.!?
90's கிட்ஸ்களுக்கு இவரை கொடூர வில்லனாக தான் தெரியும், அதுவும் கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் செய்யும் கொடூர வில்லத்தனம் இப்பொது பார்த்தாலும் நடுங்க வைக்கும். அவர் தான் நடிகர் மன்சூர் அலிகான்.
ஆனால், தற்போதைய 2K கிட்ஸ்களுக்கு இவரை ஒரு காமெடி நடிகராக தான் தற்போது தெரிகிறது. மேலும், தற்போது லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் வரும் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலில் ஆடியிருப்பது( அது பழைய பாடல் வீடியோ) மூலம் தற்போது பிரபலமாகிவிட்டார்.
இவர் இயக்கத்தில் தற்போது இவரது மகன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் ஆரம்பிக்கப்படவில்லை. ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கும் போது தனக்கே உரித்த பாணியில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்களேன் - விஜய் ‘அந்த’ ஆட்டத்துல கிடையாது.! வெளியான ரகசிய தகவல்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..
அப்போது அவர் பேசுகையில், என் மகனிடம் ஹீரோயின் பெண்ணை கட்டிப்பிடா என்றால் , என்னென்னமோ பண்றான். சரி விட்டு போங்க நீங்களே எடுங்க என நான் கிளம்பிட்டேன். அப்புறம் எப்படியோ எடுத்துட்டாங்க. ' என அவர் மகன் இருக்கும்போதே இதனை கூறினார்
என்ன இருந்தாலும் அப்பா முன்னாடி எப்படி ஒரு பெண்ணை கட்டிபுடிக்க முடியும். அது சங்கூச்சமாக இருக்காதா அதனால் தான் மன்சூர் அலிகான் மகன் கூச்சப்பட்டிருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.