Categories: Cinema News latest news

சாய் பல்லவி பர்த்டே!.. அந்த பட அப்டேட் வருமா?.. எதிர்பார்ப்புகளை எகிற விடும் ரசிகர்கள்!..

நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் எனக்கு பல்வேறு மொழிகளில் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாராவைத் தொடர்ந்து முதன்முறையாக பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராமாயணம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. அந்த படத்தில் அவருக்கு சீதை கதாபாத்திரம் கொடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அதன் புகைப்படங்கள் கசிந்து வைரலாகின.

இதையும் படிங்க: த்ரிஷ்யம் இயக்குனர் படத்தில் அமலா பால்!.. ஆடு ஜீவிதம் படத்துக்கு அடுத்து இன்னொரு ஜாக்பாட்டா?..

தமிழில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் எல்லாம் வெளியானது.

ஆனால், இன்னமும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ராஜ்கமல் நிறுவனம் அறிவிக்கவில்லை. சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அறிமுகக் காட்சி அல்லது படத்தின் லுக் வெளியாகுமா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: வைரமுத்துவுடன் போட்டி போட்ட ஏ.ஆர்.ரகுமான்!.. ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. செம அப்டேட்!..

மேலும், நாக சைதன்யா பிறந்தநாளுக்கு ஐ லவ் யூ என படத்தின் புரமோஷனுக்காக வாழ்த்து சொன்னதுபோல சாய் பல்லவியின் பிறந்தநாளுக்கும் அவர் ஐ லவ் யூ என வாழ்த்து சொல்வாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகை சாய் பல்லவி இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது தங்கை பூஜா கண்ணன் சித்திரைச் செவ்வானம் இன்னும் ஒரே ஒரு படத்தில் நடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகினார். சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

Saranya M
Published by
Saranya M