நயன்தாராவுடன் சல்மான் கான் நடிக்கும் படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சல்மான் கான் தனது அடுத்த படத்தில் முதல் முறையாக நயன்தாரா அவருடன் இணைந்து நடிக்கிறார். மேலும், தற்போது அப்படத்தின் வெளியீட்டு தேதியை சல்மான் கான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திறகு “SVC63” என்ற தற்காலிக பெயரில் பேசப்படுகிறது. பூஜையுடன் தொடங்கிய இந்த புதுப்படம் பெரிய பட்ஜெட் ஆக்ஷன் எண்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது. பான்-இந்தியா படம் என்பதால் பல மொழிகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த குடும்ப புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் சமாளித்து வருகிறார். ஜவான் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் இது நயன்தாராவின் இரண்டாவது படமாகும்.
நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள “Hi” திரைப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஒரு ரொமான்டிக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா 2026-ல் பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் டாக்ஸிக், பேட்ரியாட் போன்ற படங்கள் உட்பட பல படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இந்நிலையில் தற்போது ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, சல்மான் கான் தனது அடுத்த படத்திற்காக ரம்ஜான் 2027ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரம்ஜானுக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா நடித்த சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் படத்துக்கு வெளியானது. ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அடுத்த ரம்ஜானுக்கு வெளியாகும் சல்மான் கான் படம் ரசிகர்களை கவருமா? அல்லது மீண்டும் ரசிகர்களை நல்ல நாள் அதுவுமாக சங்கடத்தில் ஆழ்த்துமா என்பதை காத்திருந்து காண்போம்.
