×

புது பட டிரெய்லரை பார்த்து கதறி அழுத சமந்தா.... எந்த படம் தெரியுமா?

 
புது பட டிரெய்லரை பார்த்து கதறி அழுத சமந்தா.... எந்த படம் தெரியுமா?

அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். அதன்பின் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது  ‘ராக்கெட்ரி  தி நம்பி எஃபெக்ட்’ என்கிற திரைப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி அவரே தயாரித்துள்ளார். இப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது ஆகும். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோவை பிரபலங்கலும் மாதவனை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த டிரெய்லர் வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள சமந்தா ‘இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து நான் அழுதேன். மாதவன் சார் நீங்கள் ஒரு ஜூனியஸ்’ என பதிவிட்டுள்ளார்.
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News