Connect with us

Cinema News

பட புரமோஷனுக்காகத்தான் எனக்கிருந்த நோயை வெளியே சொன்னேன்!.. பகீர் கிளப்பிய சமந்தா!..

நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய் குறித்து வெளியே சொல்லாமல் இருந்து வந்த நிலையில், வேறு வழியில்லாமல் தான் யசோதா படத்தின் புரமோஷனுக்காக வெளியே சொல்ல வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன் என பேசியிருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதிலிருந்து மீள்வதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இதையும் படிங்க: மீண்டும் பின் வாங்கிய பிரபாஸ்!.. கல்கி அவதாரம் எடுக்க இன்னும் சரியான காலம் வரலப்போல?..

திடீரென ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டு டப்பிங் பேசுவது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்து சமந்தா வெளிப்படையாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், அந்த அறிவிப்புக்கு பின்னர் சமந்தாவை பலரும் சிம்பதி குயின் என கிண்டல் பேசி வருவதாகவும் அதே ஃபார்மூலாவை தான் சாகுந்தலம் படத்தின் புரமோஷனுக்கும் சமந்தா பயன்படுத்தினார் என்றும் கலாய்த்தனர்.

இதையும் படிங்க: செமயா நடிச்சும் யாரும் கை தட்டலயே!.. லால் சலாம் ஷூட்டிங்கில் ஏமாந்து போன ரஜினி…

இந்நிலையில், நான் அப்படி செய்யவில்லை என்றால் தயாரிப்பாளர் நம்முடைய படமே செத்துப் போய் விடும் என கெஞ்சினார். அதன் காரணமாகத்தான் எனக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டேன். இல்லையென்றால், என் வலிகளை அப்படியே மறைத்துக் கொண்டே வாழ்ந்திருப்பேன் எனக் கூறியிருக்கிறார்.

சமந்தாவுக்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் அவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. விஜய் தேவரகொண்டா ஒரு வருடம் காத்திருந்து குஷி படத்தை முடித்து ரிலீஸ் செய்தார். பாலிவுட்டில் ஏற்கனவே சமந்தா நடித்த சிட்டாடல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top