Categories: latest news throwback stories

பருத்திவீரன் படத்துக்கு நீங்களா தயாரிப்பாளர்?.. ஞானவேல் ராஜாவின் நாக்கை பிடுங்கிய சமுத்திரகனி!..

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பருத்திவீரன் பட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அமீருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதை தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமீர் மற்றும் கார்த்தி இடையே ஏற்பட்ட பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் தன்னை ஏமாற்றியதாக பேட்டி அளிக்க சசிகுமார் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: யோகிபாபுவுக்கு அடுத்த மண்டேலாவா குய்கோ?.. பிரபல விமர்சகர் என்ன சொல்றார் பாருங்க!..

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாலும், அந்த படத்தை உருவாக்கும் போது பணமே இல்லை என பாதியிலேயே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கை விரித்து விட்டார் என்றும் நடிகர் சூர்யா தம்பியின் படத்தை அமீரிடமே ஒப்படைத்து விட்டு நைஸாக கழண்டுக் கொண்டார் என்றும் சமுத்திரகனி குறிப்பிட்டுள்ளார்.

அந்த படத்திற்காக ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டு அமீர் அண்ணனுக்காக அலைந்து திரிந்தவன் நான், இதுவரை இந்த விவகாரத்தில் வாய் திறக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால், ஞானவேல் ராஜா நீங்க பேசியது ரொம்ப பெரிய தவறு பிரதர். அமீர் அண்ணனை அசிங்கப்படுத்த நினைத்தால் உண்மை அறிந்தவர்கள் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். தம்பி சசிகுமாரும் அந்த படத்துக்கு பணம் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

உண்மையாவே சொல்லுங்க, பருத்திவீரன் படத்துக்கு நீங்க தான் தயாரிப்பாளரா? அமீர் அண்ணன் அந்த சட்டையை உங்களுக்கு பெருந்தன்மையுடன் கொடுத்தார் என சமுத்திரகனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M