×

ஆரியை மிஞ்சும் சனம் ஷெட்டி... டைட்டில் அடிச்சு தூக்கிடுவாங்க போலயே!

சனம் ஷெட்டிக்கு குவியும் மக்கள் ஆதரவு

 
பிக்பாஸ் வீட்டில் யார் எப்படி என ஒரே ஒரு விஷயத்தில் கணிக்க முடியாது. ஆரம்பத்தில் நல்லவர்களாக தெரிந்தவர்கள் பின்னர் சுயரூபம் எடுத்து வில்லனாக தெரிவார்கள். கெட்டவர் என நினைத்திருந்த ஒருத்தர் கடைசியில் மக்கள் மனதை வென்றிடுவார்.

அப்படிதான் ஆரம்பத்தில் இருந்து மக்கள் எல்லோரையும் கணித்து வருகின்றனர். இதில் கடந்த சில வாரங்களாகவே ஆரிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக பெருகிவிட்டது. இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்டுள்ள "மணிக்கூண்டு" டாக்ஸ் மிகவும் வித்தியாசமாகவும் சூப்பராகவும் இருக்கிறது. சண்டை , போட்டி , பெர்பார்மென்ஸ் என அடிச்சு துள் கிளப்புறாங்க.

அந்தவகையில் தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் ப்ளாக் அண்ட் காலத்து நடிகர்களாக மாறி நடித்து காண்பிக்கின்றனர். இதில் சனம் ஷெட்டி அற்புதமாக நடித்து ஆடியன்ஸ் மனதை கொள்ளையடித்துள்ளார். இப்படியே போனால் ஆரியா...? அது யாரு? என கேட்டு மக்கள் சனம் ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்து டைட்டில் கொடுக்க வச்சிடுவாங்க போல...

From around the web

Trending Videos

Tamilnadu News