Categories: Cinema News latest news

அனிமல் படத்துக்கு எந்த தமிழ் நடிகர் பொருத்தமா இருப்பாரு?.. சந்தீப் ரெட்டி வங்கா சொன்ன பதிலை பாருங்க!

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா கடந்த ஆண்டு பாலிவுட்டில் ரன்பீர் கபூரை வைத்து இயக்கிய படம்தான் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி திம்ரி, பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய அந்த படம் பிலிம் ஃபேர் நிகழ்ச்சியிலும் விருதுகள் ஆறு விருதுகளை தட்டி தூக்கியது. சிறந்த நடிகருக்கான விருதை அந்த படத்தை இயக்கிய ரன்பீர் கபூர் வென்றார்.

இதையும் படிங்க: ‘கதை கேளு..கதை கேளு’ பாடலில் இசைஞானி செய்த மேஜிக்! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்

அனிமல் திரைப்படத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏகப்பட்ட பிரபலங்களை பல கருத்துக்களை தெரிவித்தனர். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் அனிமல் படத்தை தாக்கி பேசியிருந்தார்.

இந்நிலையில், அனிமல் படத்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை தேர்வு செய்ய வேண்டுமென்றால் யார் சரியாக பொருந்துவார்கள் என்கிற கேள்வி சந்தீப் ரெட்டி வங்காவிடம் வைக்கப்பட்டது. ஆனால் அவர் சற்றும் யோசிக்காமல் சூர்யா சார் கச்சிதமாக பொருந்துவார் என நடிப்பின் நாயகனை சொன்ன நிலையில் சூர்யா ரசிகர்கள் பலரும் விரைவில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் சூர்யா நடித்த போகிறார் என சோசியல் மீடியாவை அலற விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மலையாள படங்களை புறக்கணிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்!.. ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டு!..

சிறப்பான நடிப்பை தமிழ் சினிமாவில் சூர்யாவைத் தவிர மற்ற நடிகர்கள் கொடுக்க முடியாது என்பதைத்தான் இது குறிக்கிறது என விஜய் மற்றும் அஜித்தை கலாய்த்து சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனாலும் சில சூர்யா ரசிகர்கள் சந்தீப் ரெட்டி வங்கா நமக்கு வேண்டாம் அண்ணா அவரது படங்கள் எல்லாம் பெண்களை இழிவுபடுத்தி படு மோசமாக எடுக்கப்படுகிறது என பொது நலத்துடன் பதிவுகளை பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: இனிமே டாக்டர் ராம்சரண்!.. சென்னை பல்கலைக் கழகத்தில் சிரஞ்சீவி மகனுக்கு கிடைத்த அங்கீகாரம்!..

Saranya M
Published by
Saranya M