Connect with us

Cinema News

என்ஜாய் எஞ்சாமி பிரச்சனை!.. ஏ.ஆர். ரஹ்மானும் வசமாக சிக்கியிருக்கார்.. சந்தோஷ் நாராயணன் ஓப்பன்!..

2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி ஆல்பம் பாடல் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த பாடலை சந்தோஷ் நாராயணன் தயாரித்து இருந்தார். ஏ.ஆர். ரஹ்மானின் யூடியூப் சேனல் எனக் கூறப்பட்ட மஜா யூடியூப் சேனலில் வெளியானது.

சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து அந்த பாடலை உருவாக்கி பாடி, நடித்தனர். மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகவும் அது மாறியது. ஆனால், அந்த பாடல் வெளியானதற்கு பிறகு சந்தோஷ் நாராயணன் மற்றும் தெருக்குரல் அறிவு இடையே பிரச்சனை வெடித்தது.

இதையும் படிங்க: 31 குழந்தைங்களுக்கு நான் அம்மா!.. கல்யாணத்துக்கு பிறகும் நான் மாறல!.. ஹன்சிகா ஓப்பன் பேட்டி!..

படைப்பை பெற்றுக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சிட்டாங்க என அறிவு போட்ட போஸ்ட் சர்ச்சையாக மாறியது. ஆனால், அங்கே என்ன பிரச்சனை என்பதை தெளிவாக கூறவில்லை. அல்லது, சந்தோஷ் நாராயணனுக்கே தெளிவு தற்போது தான் பிறந்திருக்கும் என தெரிகிறது.

என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் சல்லிக்காசு கூட வரவில்லை என சந்தோஷ் நாராயணன் வீடியோ போட்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தான் ஏமாற்றி விட்டார் என நெட்டிசன்கள் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பினர்.

இதையும் படிங்க: படுத்துக் கொண்டு சொர்க்கத்தை காட்டும் ஸ்ரீதேவி மகள்!.. என்னா பொண்ணுடா என ஏங்கும் பாய்ஸ்!..

அய்யோ அவரும் என்னை போலவே ஏமாந்தவர் தான், அவர் தான் எனக்கு எப்போதும் ஆலோசனை வழங்கும் நபர் என இன்னொரு விளக்கத்தையும் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

மேலும், தெருக்குரல் அறிவு மற்றும் தீக்கு சீக்கிரமே சம்பளத்தை கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top