Categories: Cinema News latest news

உள்ளத உள்ளபடியா எடுத்தா நடிக்கலாம்… உங்களுக்கு இருக்க நக்கல் குறையாது சாரே… வைரலாகும் சத்யராஜ்!…

Sathyaraj: தமிழ்சினிமாவின் பயோபிக்குகள் தற்போது நிறைய உருவாக தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்க இருந்ததாக தகவல்கள் கசிந்த நிலையில் அதற்கு அவரே தற்போது சிரித்துக்கொண்டு கொடுத்திருக்கும் விளக்கமும் வைரலாக தொடங்கி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஹீரோவா என்ட்ரி கொடுத்தாலும் வில்லன் நடிகராக தன்னுடைய முத்திரையை பதித்தவர் சத்யராஜ். வளர்ந்த உருவம், நக்கல் பேச்சு என அவர் நடிப்புக்கு இன்றுவரை ரசிகர்கள் அதிகளவில் இருக்கத்தான் செய்கின்றனர். ஹீரோவாக அவர் நடித்த படங்களை விட வில்லன் அவதாரத்தில் அவர் செய்த கலாட்டாக்களுக்கே வரவேற்பு அதிகம்.

இதையும் படிங்க:பெரிய நடிகர்கள்.. பல கோடி பட்ஜெட்!.. வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்!.. எல்லாமே இந்த வருஷம் ரிலீஸ்!

சமீபகாலமாக நிறைய படங்களை ஒப்புக்கொள்ளாத சத்யராஜ் தன் நடிப்புக்கு தீனி போடும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

இதில் மோடியாக சத்யராஜ் நடிக்க இருக்கிறார் எனவும் பலரிடத்திலிருந்தும் பேச்சுக்கள் உருவானது. ஆனால் தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த  சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நீங்க மோடியாக நடிக்க போகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த சத்யராஜ், அது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. இதை யாரும் கிளப்பி தான் விட்டிருக்கின்றனர். என்னிடம் அப்படம் குறித்த எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என சிரித்துக் கொண்டே கூறினார். உடனே செய்தியாளர்கள், அப்போ உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தா நடிப்பீர்களா என கேள்வி எழுப்பினர்.

அதற்கும் யோசிக்காத சத்யராஜ், உள்ளதை உள்ளபடியே எடுத்தால் நடிக்கலாம் என கலாய்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் நிறைய பயோபிக் படங்கள் உருவாக தொடங்கி இருக்கிறது. இளையராஜாவின் வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily