#image_title
Sathyaraj: 80களில் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் சத்தியராஜ். குறிப்பாக பல திரைப்படங்களில் கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருப்பார். அதற்கு முன் வில்லனின் அடியாட்களில் ஒருவராக மட்டுமே பல படங்களில் நடித்திருக்கிறார். 80களில் நிறைய ரஜினி படங்களில் நடித்திருக்கிறார்.
கடலோர கவிதகள் படம் மூலம் சத்தியராஜை ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க துவங்கினார். சில படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் அதே படத்தில் மற்றொரு வேடத்தில் ஹீரோவாக சத்தியராஜே நடிப்பார். இதற்கு நல்ல உதாரணம் அமைதிப்படை.
இதையும் படிங்க: சிவாஜி அப்படி சொன்னதும் எனக்கு ஆஸ்கரே கிடைச்ச மாதிரி இருந்தது… இயக்குனர் நெகிழ்ச்சி!
மணிவண்ணன் இயக்கிய அப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அமைதிப்படையில் காட்டப்பட்ட காட்சிகளும், அரசியலும் இப்போதும் பொருந்தும்படி இருப்பதுதான் மணிவண்ணனின் சிறப்பு. மணிவண்ணன் இயக்கத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சத்தியராஜ்.
அதேபோல், சத்தியராஜை ஒரு ஜனரஞ்சக ஹீரோவாக மாற்றியது இயக்குனர் பி.வாசு. அவரின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார் சத்தியராஜ். கடந்த 10 வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். இப்போதும் பிஸியாக நடித்து வரும் நடிகராக சத்தியராஜ் இருக்கிறார்.
இப்போதுள்ள ஹீரோ நடிகர்களுக்கு அப்பாவாக தொடர்ந்து நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கட்டப்பாவாக வந்து கலக்கினார். சத்தியராஜின் அந்த வேடத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். முதல் பாகம் வெளிவந்தபோது ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்’ என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சத்தியராஜ் ‘நான் 100 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அதில பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறேன். நடிகன், பூவிழி வாசலிலே, மக்கள் என் பக்கம், அமைதிப்படை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, ஒன்பது ரூபாய் நோட்டு என சொல்லிக்கொண்டே போகலாம். எவ்வளவுதான் நல்ல குணச்சித்திர வேடங்களில் நான் நடித்தாலும் ஹீரோவாக நான் நடித்ததை ஒப்பிட்டால் அது குறைவுதான்.
வால்டர் வெற்றிவேல் படத்தில் நான்தான் வால்டர். ஆனால், என்னதான் கட்டப்பா வேடம் என்றாலும் பாகுபலி படத்தில் நான் பாகுபலி இல்லை. பிரபாஸ்தான் பாகுபலி. பாகுபலியில் ஒரு நல்ல வேடம். அவ்வளவுதான்.. அதனால் ஹீரோவாக நடிக்கும் திருப்தி அதில் இருக்காது’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: விடுதலை 2-வில் வரலாற்றை திரித்து காட்டியிருக்கிறாரா வெற்றிமாறன்?!… பொங்கும் பிரபலம்!…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…