Connect with us

Cinema News

அது வேற வாய்!.. இது நாற வாய்.. மீண்டும் கிளம்பிய சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. இந்த வாட்டி மாட்டியது இவரா?..

சூப்பர் ஸ்டார் சர்ச்சை என்றுமே ஓயாது போலத்தான் தெரிகிறது. ஜெயிலர் படத்தில் பட்டத்தை பறிக்க பார்க்கிறாங்க என ரஜினிகாந்த் பாட்டே வச்சாலும் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த கேள்விகளும் அதற்கு நடிகர்கள் அளிக்கும் வில்லங்க பதில்களும் வைரலாகி வருகின்றன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விழா மேடையில் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என அழைத்தார். மேலும், தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என பலரும் கூறினர்.

இதையும் படிங்க: பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அந்த ஹேண்ட்ஸம் ஹீரோ!.. யாருன்னு பார்க்கலாமா?..

அப்போது மறுத்து பேசாத நடிகர் விஜய் அதை ரசித்த நிலையில், அதன் பின்னர் அதன் காரணமாகவே லியோ பட ரிலீஸ் சமயத்தில் பல சிக்கல்களை சந்தித்தார். ரஜினிகாந்த் ரசிகர்கள், ரஜினியை தலைவராக ஏற்றுக் கொண்ட பல பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு எதிராகவும் லியோவுக்கு எதிராகவும் நேரடியாக வேலை பார்த்தனர்.

அதையெல்லாம் பார்த்து புரிந்துக் கொண்டு அரசியலுக்கு வந்தால் மேலும் ஆப்பு அடிப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்ட விஜய் லியோ படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்பதையும் அப்பா சட்டையை போட மகன் ஆசைப்படக் கூடாதா என்கிற தனது விருப்பத்தையும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..

இந்நிலையில், மீண்டும் சூப்பர்ஸ்டார் சர்ச்சையை நடிகர் சத்யராஜ் ஆரம்பித்துள்ளார். சமீபத்தில், யூடியூபர் இர்ஃபான் பேட்டியில் பேசிய சத்யராஜ் சூப்பர்ஸ்டார் என்றால் அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் தான் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற சினிமா விழாவில் ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர்ஸ்டார் என பேசிய சத்யராஜ் அப்படி பேசியும் ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில், இப்படி பேசுகிறார் என பஞ்சாயத்தைக் கிளப்பி உள்ளனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top