Connect with us
savithri

Cinema News

இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்…

Actor Savithri: நடிகர் திலகம் சிவாஜி என்றால் நடிகையர் திலகம் என்றால் அது சாவித்ரி. இவரை ஒரு பெண் சிவாஜி என்றே சொல்லலாம். பல கதாபாத்திரங்களில் அழகான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அதிக விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். தன் திரை வாழ்வில் 250 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 1950ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கினார். சிவாஜியுடன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு தங்கையாக நடித்த ‘பாசலமர்’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: நானும் என்ன பண்ணுவேன்? ‘காதல் மன்னன்’னாக எப்படி மாறினேன் என்பதை ஜெமினியே கூறிய சுவாரஸ்யமான தகவல்

வேட்டைக்காரன், மகாதேவி, பரிசு என பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அதிகமாக நடித்தது ஜெமினி கணேசனுடன்தான். அதனால்தான் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தாலும் அவரையே திருமணம் செய்து ஒரு மகனுக்கும் தாயானார்.

ஒருகட்டத்தில் சொந்த படம் தயாரித்து நஷ்டமடைந்து, கடனில் சிக்கி சொத்துக்களை இழந்து, மதுப்பழக்கத்திற்கு உள்ளாகி பின்னர் இறந்துபோனார். வறுமையில் வாடியபோது கிடைக்கும் வேடங்களிலெல்லாம் நடித்தார். சில மோசமான கதைகளில் கூட நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படிங்க: ஏவிஎம் சரவணன் மட்டும் அத செய்யலைனா படம் ஊத்திருக்கும் – ‘ஜெமினி’ பட வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

ஜெமினி நடிப்பில் 1968ம் வருடம் உருவான திரைப்படம்தான் ‘பணமா பாசமா’. இந்த படத்தில் திமிர் பிடித்த மாமியாராக யாரை நடிக்க வைக்கலாம் என இயக்குனர் யோசித்தபோது ‘சாவித்ரியை நடிக்க வையுங்கள்’ என ஜெமினி கூறியுள்ளார். எனவே, சாவித்ரியின் வீட்டிற்கு போன இயக்குனர் இது பற்றி பேசியுள்ளார்.

கோபமடைந்த சாவித்ரி ‘நான் மாமியாராக நடிக்கிறேன். ஆனால், அந்த படத்தில் ஜெமினியை தூக்கி விடுங்கள்’ என சொல்ல ஆளை விட்டால் போதும் என ஓட்டம் பிடித்தாராம் இயக்குனர். திருமணமாகியிருந்தாலும் ஜெமினிக்கும், சாவித்ரிக்கும் அப்போது சரியான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெமினி கணேசனை அடையாளம் தெரியாமல் விமர்சித்த பத்திரிக்கையாளர் : ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Continue Reading

More in Cinema News

To Top