ஏவிஎம் சரவணன் மட்டும் அத செய்யலைனா படம் ஊத்திருக்கும் - ‘ஜெமினி’ பட வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு போற்றப்படும் நடிகராக இருந்து வருகிறார். சினிமாவிற்காக நடிப்பிற்காக அதிகம் மெனக்கிடும் நடிகர்களில் விக்ரமை அடிச்சுக்க யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கமலுக்கு அடுத்தபடியாக விதவிதமான கெட்டப்களை போட்டு நடிக்கக் கூடிய நடிகராக விக்ரம் இருந்து வருகிறார்.

ஆரம்பகாலங்களில் விக்ரம் நடித்த படங்கள் பெரும் தோல்வியையே தழுவிக் கொண்டு வந்தன. அந்த வகையில் பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது ஜெமினி திரைப்படம். சரண் இயக்கத்தில் விக்ரம் மற்றும் கிரண் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜெமினி.

இதையும் படிங்க : இதனாலதான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்கறது இல்ல!… இப்படிதான் தேர்வுகள் நடக்குமாம்!..

மசாலா கலந்த காதல் திரைப்படமாக ஜெமினி அமைந்தது. விக்ரம் கெரியரிலும் அந்தப் படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக பரத்வாஜ் இசையில் ஓ போடு பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

படத்தில் மலையாள நடிகர் முரளி ஒரு போலீஸ் அதிகாரியாக விக்ரமிற்கு ஆலோசகராக நடித்திருப்பார். கலாபவன் மணி வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது.

இந்த நிலையில் படத்தின் கதைப்படி போலீஸ் அதிகாரியாக வரும் முரளியை முதலில் நல்லவராகவும் அதன் பின் கடைசியில் அவர்தான் மெயின் வில்லனாகவும் சரண் எழுதியிருந்தாராம். இதை ஏவிஎம் சரவணனிடம் போய் காட்ட அவருக்கு இதில் உடன்பாடே இல்லையாம்.

ஆரம்பத்தில் இருந்து நல்லவனாக பார்த்த ஒருவரை திடீரென வில்லனாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்தும். அதனால் கொஞ்சம் மாற்றம் வைக்கலாம் என சொல்லியிருக்கிறார். ஆனால் சரண் யோசித்தாராம். அதன் பின் எதுக்கும் கதாசிரியரான பீட்டர் செல்வக்குமாரிடம் ஆலோசித்து பாருங்கள் என சரவணன் சரணிடம் கூறினார்.

இதையும் படிங்க : ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

மூன்று முகம் உட்பட பல வெற்றித்திரைப்படங்களுக்கு கதை எழுதிய சிறந்த வசனகர்த்தாதான் பீட்டர் செல்வக்குமார். அதுமட்டுமில்லாமல் அம்மன் கோயில் கிழக்காலே போன்ற பல படங்களையும் தயாரித்தவராம். அவரிடம் சரண் இந்த கதையை சொல்ல பீட்டர் செல்வக்குமாரும் இதை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு பீட்டர் செல்வக்குமார் அந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் சில திருத்தங்கள் சொல்ல படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒரு பக்கம் ஏவிஎம் நிறுவனம் இப்படி பல வெற்றிப்படங்களுக்கு கதையில் சில மாற்றங்களை கூறி உதவியிருக்கின்றது. இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

Related Articles

Next Story