இதனாலதான் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்கறது இல்ல!… இப்படிதான் தேர்வுகள் நடக்குமாம்!..

தேசிய விருது அறிவிப்பு வெளியான பின்னர் வரவேற்பை விட எதிர்ப்புகளே அதிகம் உருவாகி இருக்கிறது. வெளிவந்த மிகச்சிறப்பான தமிழ் படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்படாமல் உதாசீனப்படுத்தியதாக பலரும் விமர்சித்தனர். இந்த சர்ச்சை குறித்தும் விருது தேர்வுகள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரபல தமிழ் தயாரிப்பாளரும், பாஃப்டா இன்ஸ்டிட்யூட் நிறுவனருமான தனஜெயன் விருது தேர்வுகள் குறித்து தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது, நிறைய பேருக்கு விருதுகள் கிடைத்தால் கொண்டாடப்படுவார்கள். இல்லை என்றால் தேசிய விருதினையே விமர்சிப்பார்கள்.

இதையும் படிங்க: ரஜினி வேண்டாம்னு சொல்லி சூப்பர் ஹிட் அடித்த ரெண்டு பாட்டு!.. பாட்ஷா பட சீக்ரெட்டை பகிர்ந்த சுரேஷ் கிருஷ்ணா…

தமிழில் வந்த நல்ல படங்களுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டு வகையில் இந்த விருது கிடைக்காமல் போனதற்கு காரணமாக பார்க்கப்படலாம். ஒன்று போட்டியில் இருந்த படங்களின் தரம் நின்று பேசும். இரண்டாவது இங்கிருந்து சென்ற நடுவர்கள் தங்கள் மொழிக்கு எப்படி நின்று பேசினர் என்பதாக பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வசந்த் இருந்தாரே ஏன் விருது கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினால் அவர் படங்களின் தேர்வில் இல்லை. அவர் குறும்படத்திற்கான தேர்வு குழுவில் தான் இருந்தார். புத்தகம், படங்கள் என அனைத்துக்குமே 12 பேர் கொண்ட குழு தான் தேர்வு செய்யும்.

இதையும் படிங்க: ஹரோல்டு தாஸின் மகன் தான் லியோவா… வாவ் சொல்ல வைக்கும் லியோ சீக்ரெட்ஸ்! அடடா!

ஒருமனதாக எடுக்கும் முடிவே இறுதியானது. ஒருவர் கூட இந்த படத்தினை விட வேறு படம் சிறந்தது எனக் கூறி விட்டால் அந்த படத்துக்கு விருது கிடைக்காது. இருக்கும் அனைவருமே ஆம் சொல்ல வேண்டும். ஒருத்தர் நிராகரித்து இருந்தால் கூட ஜெய்பீம் போன்ற நல்ல படங்களுக்கு விருது மிஸ்ஸாகி இருக்கலாம்.

தேசிய விருது பணம் கொடுத்து வாங்கவே முடியாது. அதுக்கு வாய்ப்பே இல்லை. பிடித்த படத்திற்காக கோரிக்கை வைக்கலாம். அதில் யாரும் ஒப்புக்கொள்ளவிட்டால் அந்த படத்தினை ஒதுக்கிவிடுவார்கள். ஒரு படம் சொல்லும் போது எல்லாரும் அமைதியாக இருந்தால் மட்டுமே கொடுப்பார்கள் என்றார்.

விருதுக்கு யார் தேர்வு செய்கிறார்கள் என்பதை விருது அறிவிப்புக்கு முன்னர் வரை யாருக்குமே தெரியாது. அந்த அறிவிப்பு வெளியிலே வராது. அந்த நடுவர்கள் கூட யாரிடமும் இந்த தகவலை வெளியில் சொல்லக்கூடாது. குடும்பத்திடன் கூட சொல்லக்கூடாது என்று எழுதியே வாங்கி கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story