×

சித்தி 2 வில் திரைக்கதை மன்னன் : சின்னத்திரையில் அறிமுகம் !

சித்தி 2 தொலைக்காட்சி தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதில் பாக்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சித்தி 2 தொலைக்காட்சி தொடர் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதில் பாக்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சித்தி தொடருக்கு எப்போதும் சிறப்புமிக்க இடமுண்டு. தமிழில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த தொடர் மூன்று ஆண்டுகளுக்கு ஒளிபரப்பானது. அந்த காலத்தில் அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் முந்தைய பாகத்தில் நடித்த ராதிகா சரத்குமார் பொன்வண்ணன், ரூபினி, மீரா வாசுதேவன், ஷில்பா, மகாலட்சுமி, நிகிலா ராவ், ப்ரீத்தி, அஷ்வின், ஜீவன்ரவி, அருள்மணி உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.

மேலும் சிறப்புத் தோற்றத்தில் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்  மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளனர். இந்த தொடரை சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார். முந்தைய தொடரின் வெற்றியால் இப்போது இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News