×

இந்த காமெடி நடிகையின் சகோதரி தான் செல்வராகவனின் மனைவி... ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறையில்  விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்ட இவர் தன் ஒவ்வொரு படைப்புகளிலும் அவலங்களின் அழகையும்  அவமானங்களின் வெடிப்புகளையும் துணிவுடன் திரையில் கொண்டு வருபவர்.

 

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு  நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து ஒரு சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு  2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கீதாஞ்சலி, செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தற்போது இவர்களுக்கு லீலாவதி என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் கீதாஞ்சலி பிரபல காமெடி நடிகை  வித்யூ லேகா ராமனின்  சகோதரி என்பது தெரியவந்துள்ளது. நடிகை வித்யூ லேகாவின் தந்தையும் நடிகருமான மோகன் லேகா அவர்களின் சகோதரர் பி எஸ் ராமனின் மகள் தான் செல்வராகவனின் மனைவியான கீதாஞ்சலி ராமன்.  இந்த விஷயம் இதுவரை தெரிந்திராத பலரும் அட ஆமாம்பா... முக ஜாடை கூட அப்படியே இருக்கு என ஷாக்காகியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News