தாயம் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் சான் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கியவர் நடிகை ஐரா அகர்வால், அதன் பின்னர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் பிரபலனவர்.
தற்போது, நம்ம மதுர சிஸ்டர்ஸ் எனும் கலர்ஸ் டிவியிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலிலும் இயங்கி வருகிறார் ஐரா அகர்வால். இவர் அண்மையில் தனது நேர்காணலில் சென்னையில், ஒரு ஷாப்பிங் மாலில் தனக்கு நடந்து ஒரு அதிரடி சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
அதாவது, அவர் அப்போது தான் புதியதாக கார் வாங்கினாராம். அந்த காரில் அந்த ஷாப்பிங் மால் பக்கம் செல்லும் போது, ஒரு இருசக்கர வாகன ஒட்டி இடித்து விட்டாராம். உடனே இவருடைய டிரைவர் அவரிடம் பணிவாக பேசி ஏன்பா இந்த மாதிரி வண்டி ஓட்டுறீங்க என கேட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன் – கொஞ்சம் நிதானமா இரு.. லோகேஷுக்கு கடிவாளம் போட்ட ‘அந்த’ முன்னணி நடிகர்…
உடனே அந்த இருசக்கர ஆசாமி டிரைவரை தாக்கியுள்ளாராம். இதனை பார்த்த இரா உடனே இவரும் இறங்கி சண்டையிட்டுள்ளார். அப்போது அவர் மேலே கைவைத்து விட்டாராம் . பிறகு ஐராவுக்கு கோபம் வந்து அந்த ஆசாமியை போட்டு அடித்து நொறுக்கிவிட்டாராம். அந்த காட்சிகள் சென்னை ஷாப்பிங் மால் சிசிடிவி கேமிராவில் மொத்தமாக பதிவாகி இருந்ததாம். இதனை அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் ஐரா அகர்வால்.
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…