×

சீரியஸ் ஆன கேஸ்... பாலியல் தொல்லை செய்த ரசிகர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது!

கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகை மீரா சோப்ராவிடம் இணையவாசி ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என கேட்டார். அதற்கு, மீரா மகேஷ் பாபு என பதில் கூறினார்.

 

உடனே இன்னோரு ரசிகர், " ஜூனியர் என் டி ஆர் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டதற்கு, அவரை யார் என்று எனக்கு தெரியாது என முகத்தில் அடித்தார் போல் பதில் கூறினார். இதனால் கடுப்பான ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் மீரா  சோப்ராவை கண்டபடி ஏசியுள்ளனர். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததை தாங்கமுடியாத மீரா, ஜூனியர் என் டி ஆரை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

மேலும், ஒருவரின் ரசிகராக நீங்கள் இல்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். நான் அனைத்து பெண்களுக்கும் சத்தம் போட்டு ஒன்றை கூறிக் கொள்கிறேன் "நீங்கள் ஜூனியர் என்டிஆரின் ரசிகையாக இல்லை என்றால் நீங்கள் கற்பழிக்கப்படலாம், கொலை செய்யப்படப்படலாம், அல்லது உங்கள் பெற்றோர்கள் அவரது ரசிகர்களால் கொல்லப்படலாம். என கடுங்கோபத்துடன் பதிவிட்டிருக்கிறார்.மேலும், ரசிகர்களின் மோசமான பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை ஹைதராபாத் போலீஸ்க்கும், , தொழில்துறை அமைச்சர் கே டி ராமாராவையும்டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை மீரா சோப்ராவுக்கு பதிலளிக்கும் விதமாக கே டி ராமாராவ் ‘இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி தெலங்கானா போலீஸாருக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ஆபாச தொல்லை செய்த ஜூனியர் NTR ரசிகர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News