×

தந்தை மகன் உயிரிழப்புக்கு கடுமையான காயங்களே காரணம்...பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

சாத்தான்குளத்தின் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டும் பேரும் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த்தாக புகார் எழுந்தது. இந்த செயலை பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டித்தனர்.
 

இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்த பின்னரே காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்  5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு சிபிஐ கைக்கு சென்ற பின் விசாரணை மேலும் சூடுபிடித்தது.

இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு அவரின் உடலில் இருந்த காயங்களே காரணம் என உடற்கூறி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயராஜின் உடலில் 17 காயங்களும்,பென்னிக்ஸின் உடலில் 13 காயங்களும் இருந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது போலீசாருக்கு எதிரான வலுவான ஆதாரமாக கருதப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News