Connect with us

Cinema News

நீ என் புள்ள மாதிரி, உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது… இயக்குனர் சங்கரை வழிநடத்திய பிரபலம்… ஓ அவரா…?

பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்குவதற்கு என பெயர் போனவர்தான் இயக்குனர் சங்கர். தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் கொண்டவர். அதனை ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்து காட்டி இருக்கின்றார். சாதாரண குடும்பத்தில் பிறந்த சங்கர் நாடக கம்பெனியில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

அங்கு சிறு சிறு வேலைகளை செய்து கொண்டும் நடித்துக் கொண்டும் இருந்த இவர் நாடகத்தில் டயலாக் பேப்பரில் சிறிய மாற்றங்களை எல்லாம் செய்து வருவார். இதைப் பார்த்த எஸ்ஏ சந்திரசேகர் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கிறாயா? என்று கூற அப்படித்தான் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றார்.

பின்னர் அங்கு பல விஷயங்களை கற்று கைதேர்ந்த இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதைத் தொடர்ந்து 2-வதாக காதலன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதையடுத்து ஜீன்ஸ், முதல்வன், எந்திரன் என பல படங்களை இயக்கத் தொடங்கினார். இந்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு தோல்வியை கொடுக்கவில்லை, அனைத்துமே வெற்றி தான். கடைசியாக இவர் இயக்கிய ஐ. 2.0 திரைப்படங்கள் மட்டும்தான் சற்று சொதப்பி இருந்தது. தற்போது இந்தியன் 2 திரைப்படமும் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது.

கிட்டத்தட்ட 3 வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியாகியும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் மனம் தளராத சங்கர் தெலுங்கில் தி கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கும் அவருக்கு இப்படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தனது உதவி இயக்குனர்கள் குறித்தும், எழுத்தாளர் சுஜாதா குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா என்னை பார்க்கும் போதெல்லாம் நீ எனது மகன் போல் என்று கூறுவார். சினிமாவில் பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தவர் அவர்தான். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று அவரிடம் எப்போதும் ஒரு ஒபினியன் கேட்பேன்.

மேலும் ஜீன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தானே தயாரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். அப்போது அவரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் சொன்னது உன்னை போல் படம் எடுப்பதற்கு இங்கு குறைந்த நபர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பதற்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். உனக்கு அது வேலை கிடையாது. உன்னால் முடியாது என்ற நிலைமை வரும் போது நீ தயாரிப்பாளராக மாறலாம். வயது இருக்கின்றது, அதை வைத்து மிகச் சிறந்த திரைப்படங்களை இயக்க வேண்டும்” என்று கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top