×

இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் விபத்து - படக்குழு அதிர்ச்சி

இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

லைக்கா நிறுவனத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் படப்பிடிப்பு குழுவினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இயக்குனர் ஷங்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல் கமல்ஹாசன், லைக்கா நிறுவனம் சார்பாகவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக சென்னை சாலிகிராமத்தில் செட் போடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விரைவில் படப்பிடிப்பு நடக்கவிருந்த நிலையில், அங்கு தீ விபத்து ஏற்பட்டு பல பொருட்கள் எரிந்து போயின. ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.  இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News